இந்தப் பொருட்களை எல்லாம் வீட்டு பீரோவில் வைத்தால் செல்வம் வெளியேறிவிடுமாம்
பொதுவாக, நம்முடைய வீடுகளில் நாம் எந்த பொருட்களை எந்த இடத்தில் வைக்கின்றோம், அதை எப்படி பராமரிக்கிறோம் என்பதை பொறுத்தும் நம்மை வீட்டை சுற்றி ஒரு நல்ல அதிர்வலைகள் மற்றும் எதிர்மறை எதிர்மறைகள் உருவாகுவதற்கான ஒரு சூழ்நிலை உருவாகிறது.
அப்படியாக, நம்முடைய பணத்தை சேமித்து வைக்கக்கூடிய பாதுகாப்பாக வைக்கக்கூடிய பீரோவில் எந்த பொருட்களை கட்டாயம் வைக்க கூடாது என்பதை பற்றி பார்ப்போம்.
நாம் இறந்தவர்களின் பழைய போட்டோக்களை அடிக்கடி உபயோகம் செய்யும் பீரோவில் கட்டாயம் வைக்க கூடாது.
உபயோகப்படுத்தாத பீரோவில் நாம் வைத்துக் கொள்ளலாம். அதைப்போல், அகால மரணம் அடைந்தவரின் பொருட்களையும் பீரோவில் வைக்கக்கூடாது. அவை தங்க நகையாக இருந்தாலும் நம்முடைய நகையோடு சேர்ந்து வைப்பதை தவிர்ப்பது நல்லது.

பணம் வைக்கக்கூடிய பீரோவில் மாதவிடாய் காலங்களில் நாம் பயன்படுத்தக்கூடிய இந்த பொருட்களையும் வைக்கக்கூடாது. பீரோவை எப்பொழுதும் திறந்து வைப்பதும் கூடாது என்று சொல்கிறார்கள்.
இது நம்முடைய நேர்மறை ஆற்றல்களை வெளியேறி பணம் தங்காமல் போவதற்கான நிலையை கொடுத்து விடுமாம். அதைப்போல் ஓடாத கைக்கடிகாரம் உடைந்த கண்ணாடி உடைந்த தங்க நகைகள் போன்றவற்றை நல்ல நகையோடு சேர்த்து வைக்கக் கூடாது. இதனால் எதிர்மறை ஆற்றல்கள் வந்து சேரும் என்று சொல்லப்படுகிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |