புதிய ஆடைகளில் மஞ்சள் தடவி அணிவது ஏன் தெரியுமா?
நாம் அனைவருக்கும் புதிய உடை என்றாலே ஒரு புத்துணர்ச்சி வந்துவிடும்.நம் வீடுகளில் ஏதேனும் விஷேசம் என்றால் கண்டிப்பாக புத்தாடை எடுத்து அணிவது உண்டு.
எந்த புத்தாடைகள் எடுத்தாலும் சிறிது மஞ்சள் குங்குமம் வைக்க சொல்லி பெரியவர்கள் சொல்லுவதுண்டு,பின்பு அதுவே வழக்கமாக மறவாமல் நடைமுறை படுத்திவிட்டோம்.
ஆக புத்தாடைகளில் மஞ்சள் வைப்பது வெறும் பழக்க முறை அல்லாமல் அதில் நிறைய நன்மைகள் அர்த்தங்கள் நிறைந்து இருக்கிறது.
அதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
மஞ்சள் தீமைகளிலிருந்து நம்மைக் காப்பாற்றக்கூடிய ஆற்றல் உடையது. புதிய ஆடைகள் அணிந்திருக்கும்போது, எவரேனும் தவறான எண்ணங்களுடனும் பொறாமையுடனும் நம்மைப் பார்த்தார்களேயானால், இந்த மஞ்சளானது நம்மைக் காப்பாற்றும் என்பது நமது நம்பிக்கை.
அது மட்டும் இல்லை, மஞ்சள் என்பது மங்களத்தின் அடையாளம். எனவே, ஒருவர் மஞ்சள் தடவிய ஆடையை உடுத்தியிருப்பார் ஆயின், அவர் ஏதேனும் மங்கள காரியத்தில் பங்கேற்றியிருப்பார் என்பதை நாம் அறியலாம்.
புத்தாடை என்பது கஞ்சி முதலானவையின் சம்பந்தம் உடையதனால், மஞ்சளை அதன் மேல் தடவுவதன் மூலம் அனைத்துவித தீயவையும் விலகி நன்மைகள் அடையக் காரணமாக அமைகின்றது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |