இந்த நபர்களை பில்லி சூனியம் ஏவல் என்று எதுவுமே நெருங்க முடியாதாம்.. யார் தெரியுமா?

By Sakthi Raj Aug 20, 2026 07:56 AM GMT
Report

இந்த உலகத்தில் எவ்வாறு நல்ல விஷயம் என்று ஒன்று இருக்கிறதோ, அதை போல் தீய விஷயங்களும் நிறைந்து இருக்கிறது. அப்படியாக, கெட்ட நேரம் நம்மை சூழ்ந்து விட்டால் பில்லி, சூனியம், வசியம் இவை எல்லாம் உண்மை என்று நம்ப தோன்றுவிடும்.

இருப்பினும், அது உண்மையாக இருந்தாலும் உண்மையாக இல்லாவிடிலும் இந்த ஒரு சில விஷயங்களை செய்பவர்களை இது எந்த தீய சக்திகளும் நெருங்க முடியாதாம். அதை பற்றி பார்ப்போம்.

ஒருவர் குலதெய்வ வழிபாடு மற்றும் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் வழிபாடு, காமாட்சியம்மன் வழிபாடு, ஆஞ்சநேயர் வழிபாடு ஆகியவை மேற்கொள்கிறார் என்றால் அவரை மாந்திரீகம் கொண்டு எதுவும் செய்ய முடியாது.

இந்த நபர்களை பில்லி சூனியம் ஏவல் என்று எதுவுமே நெருங்க முடியாதாம்.. யார் தெரியுமா? | No Black Magic Can Do Any Bad To This Person

இந்த உலகத்தில் காரணமே இல்லாமல் யாரும் இங்கு யாரையும் சந்திப்பதே இல்லை

இந்த உலகத்தில் காரணமே இல்லாமல் யாரும் இங்கு யாரையும் சந்திப்பதே இல்லை

மேலும், மாந்திரீகம் என்றால் நமக்கு முதலில் நினைவிற்கு வருவது பில்லி சூனியம்தான். ஒரு மனிதனை அவை குழப்பி சிந்தனை மற்றும் செயல்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விடும். பிறகு அந்த நபர் நாம் என்ன சொல்கின்றோமோ அதைத்தான் செய்வார். அதோடு ஒருவர் மனதை கட்டுப்படுத்தக்கூடிய கிரகமாக ஜோதிடத்தில் சந்திரன் இருக்கிறார்.

ஆக, ஒருவர் ஜாதகத்தில் சந்திர பகவான் பலம் இழந்து இருக்கின்ற நேரத்தில் அவருக்கு வசியம் போன்றவை எளிதாக ஒட்டிக் கொள்கிறது. இருப்பினும் கிரகம் பலம் இழந்து காணப்பட்டாலும் ஒருவர் யோகா, தியானம், காயத்ரி மந்திரம் ஜெபிக்க கூடியவர்களாக இருக்கிறார் என்றால் கட்டாயம் அவரை எந்த தீய சக்திகளும் நெருங்க முடியாது.

இந்த நபர்களை பில்லி சூனியம் ஏவல் என்று எதுவுமே நெருங்க முடியாதாம்.. யார் தெரியுமா? | No Black Magic Can Do Any Bad To This Person

அதோடு, ரத்த சொந்தம் இல்லாத இடங்களை தாண்டி மற்ற இடங்களில் சாப்பிடாதவர்களை இந்த பில்லி சூனியம் எதுவும் செய்வதில்லை. ஒரு மனிதனை அழிப்பதற்கு செய்யக்கூடிய இந்த சூனியமானது அவர்களுடைய ஆடை அணிகலன், முடி, காலடி மண் கொண்டு செய்யப்படுகிறது.

அதோடு ஒருவர் செய்யவே விரும்பாத ஒரு செயலை செய்ய தூண்டுவதே ஏவல் எனப்படுகிறது. இந்த ஏவல் ஒருவருக்கு பூஜை செய்து உணவு பொருட்களை கொடுத்து அதனால் நிறைவேற்றப்படுகிறது.

ஆக, மொத்தத்தில் ஒரு மனிதனின் செயல் தங்களுக்கு விருப்பப்படி ஆட்டி வைப்பது இத்தகைய நிகழ்வாகும். இவ்வாறு கெட்ட நேரம் நம்மை சூழ்ந்த பொழுதிலும் நாம் இறைவழிபாடு மேற்கொண்டால் நிச்சயம் இவையெல்லாம் தவிடுபொடி ஆகிடும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US