நோய் தீர்க்கும் புற்றுமண் பிரசாதம்
சங்கர நாராயணசாமி கோயில் என்பது தமிழ்நாட்டில் உள்ள சங்கரன்கோவிலில் அமைந்துள்ள சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து கோயிலாகும்.
10ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னன் உக்கிர பாண்டியனால் கட்டப்பட்டது.
ஸ்ரீ சங்கர லிங்க ஸ்வாமி என்று அழைக்கப்படும் சிவபெருமான், கோமதி அம்மன் என்று அழைக்கப்படும் பார்வதியுடன் இக்கோயிலின் முதன்மைக் கடவுளாக உள்ளார் .
சைவ வைணவ ஒற்றுமையை காட்டும் வகையில் இறைவன் இங்கு சங்கர நாராயணனாக காட்சி தருகிறார்.
இத்தலத்தின் பிரார்த்தனை தெய்வமாக கோமதி அம்மன் விளங்குகிறாள். வடக்கு திருச்சுற்றில் ஒரு பள்ளம் காணப்படுகிறது.
அந்த பள்ளத்தில் இருக்கும் புற்று மண்ணை நீரில் குழைத்து நெற்றியில் தரித்துக் கொண்டால் தீராத நோய்கள் எல்லாம் தீர்த்துவிடும் என்பது நம்பிக்கை.
இப்புற்று மண்ணை நீரில் குழைத்து நெற்றியில் பூசுவது மட்டுமின்றி நீரில் கரைத்து குடித்து விடுபவர்களும் உண்டு.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |