இந்த ராசிக்காரங்ககிட்ட மறந்தும்கூட ரகசியம் சொல்லாதீங்க.. அப்புறம் கஷ்டப்படுவீங்க
எந்த ராசிக்காரர்களால் ரகசியங்களை பத்திரமாக வைத்து கொள்ள முடியாது என்பதை பார்ப்போம்.
மனிதர்களாய் பிறந்த ஒவ்வொரு நபருக்கும் ஏதோ ஒரு ரகசியம் இருக்கும். ஜோதிட சாஸ்திரத்தின் படி, சில ராசிக்காரர்களால், ரகசியங்களை யாரிடமும் சொல்லாமல் வைத்திருக்க முடியாது.
எனவே, சில குறிப்பிட்ட ராசிக்காரர்களிடம் எந்த ரகசியங்களையும் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது நல்லது. அவை எந்த ராசிகள் என இங்கே காணலாம்.
மிதுனம்
இவர்கள் மிகவும் ஆர்வமுள்ளவர்கள். ஒரு ரகசியத்தை கண்டறிந்தால், அதை மற்றவர்களுடன் சற்றும் தாமதிக்காமல் உடனே பகிர்ந்து கொள்வார்கள். அதிகமாக பேசக்கூடியவர்கள், எனவே, ஒரு விஷயத்தை ரகசியமாக வைத்துக் கொள்வது என்பது முடியாத காரியம்.
துலாம்
இவர்கள் மனதில் இருப்பதை வெளிப்படையாக பேசிவிடுவார்கள். எப்போதும் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்று நினைப்பார்கள். சில நேரங்களில் மற்றவர்களின் நன்மைக்காக ரகசியங்களை பகிர்ந்து கொள்ளலாம்.
தனுசு
தங்கள் வார்த்தைகளால் மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பார்கள். சில நேரங்களில் மற்றவர்களின் ரகசியங்களை யோசிக்காமல் பகிர்ந்து கொள்வார்கள். ரகசியங்களை வெளிப்படுத்துவது மற்றவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் என்பதை மறந்து விடுவார்கள்.