நவம்பர் மாதத்தில் ராஜ யோகம் பெற போகும் ராசிகள்
அக்டோபர் மாதம் முடிந்து நவம்பர் மாதம் பிறக்க இருக்கிறது.வருகின்ற நவம்பர் மாதத்தில் மாதத்தில் சனி பகவான் தனது நிலையை மாற்ற இருக்கிறார்.அதாவது சூரியன், சுக்கிரன், புதன் உட்பட 4 கிரகங்களின் நிலையும் மாறும்.
அப்போது சனி பகவான் சஷ ராஜ யோகம் உருவாக்குவார். சஷ ராஜ யோகம் உருவாகும் பொழுது சில ராசிகளுக்கு நல்ல மாற்றத்தை கொடுக்கும்.அப்படியாக இந்த சஷ ராஜ யோகத்தால் அதிர்ஷ்டம் பெற போகும் அந்த 5 ராசிகள் யார்?அடுத்த மாதம் யாருக்கு அதிர்ஷ்ட கதவு திறக்க இருக்கிறது என்று பார்ப்போம்.
மேஷம்
மேஷ ராசியினருக்கு வருகின்ற நவம்பர் மாதம் சிறந்த பலன்களை தர இருக்கிறது.உடல் நிலையில் நல்ல மாற்றம் உருவாகும்.கணவன் மனைவி இடையே பந்தம் அதிகரிக்கும்.அலுவலகத்தில் ஏற்பட்ட வேலை பளு விலகி நிம்மதியான சூழல் உருவாகும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு வருகின்ற நவம்பர் மாதம் பல நாள் எதிர்பார்த்த அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வர போகின்றது.நீண்ட நாள் காத்து இருந்த வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.வியாபாரத்தில் நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு பல நாள் மன கவலைகள் தீரும்.போட்டித் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும்.வாழ்க்கை துணையால் சந்தோசம் கிடைக்கும்.பெற்றோர்கள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இது ஒரு அற்புதமான காலம்.நினைத்த காரியத்தை தொடங்க நல்ல நேரம் இது. கணவன் மனைவி இடையே கருத்துவேறுபாடுகள் தீரும்.சொத்து சம்பந்தமான விஷயங்களில் நல்ல செய்தி கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த நவம்பர் மாதம் பொன்னான வாய்ப்புகளை தேடி தர போகிறது.நீண்ட நாள் வரன் தேடுபவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.புதிய முயற்சிகள் வெற்றி பெறும். தொழிலில் வெற்றி. புதிய தொழில் தொடங்கலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |