எந்தெந்த தெய்வத்தை எத்தனை முறை வலம் வந்து வழிபட வேண்டும்?

Bakthi
By Yashini May 06, 2024 06:59 PM GMT
Yashini

Yashini

Report

கோவிலுக்கு சென்று, சுவாமி தரிசனம் செய்த பிறகு ஒரே ஒருமுறையாவது ஆலயத்தை வலம் வந்து வழிபடுவது இந்துக்களின் வழக்கம்.  

இப்படி வலம் வருவதால் ஆலயத்தில் உள்ள அனைத்து தெய்வங்களையும் வலம் வந்து வழிபட்ட பலன் கிடைப்பதுடன், பாவங்கள் தீரும் என்பது ஐதீகம்.

அந்தவகையில், முழு பலன்கள் கிடைக்க எந்தெந்த தெய்வத்தை எத்தனை முறை வலம் வர வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம். 

எந்தெந்த தெய்வத்தை எத்தனை முறை வலம் வந்து வழிபட வேண்டும்? | Number Of Times Pradakshinas And Its Benefits

தெய்வங்களும் வலம் வரும் எண்ணிக்கையும்

விநாயகர்- விநாயகப் பெருமானை 3 முறை வலம் வந்து வழிபட வேண்டும்.

சனி பகவான்- சனி பகவானை 7 முறை வலம் வந்து வழிபட வேண்டும்.

சூரிய பகவான்- சூரிய பகவானை 2 முறை வலம் வந்த வழிபட வேண்டும்.

ராமர்- ராமர், கிருஷ்ணர் மற்றும் பெருமாளை 4 முறை வலம் வந்து வழிபட வேண்டும்.

துர்கை- துர்க்கை அம்மனை வழிபடுபவர்கள் ஒரே ஒரு முறை மட்டும் வலம் வந்து வழிபட வேண்டும்.

சிவ பெருமான்- சிவ பெருமானை வழிபடுபவர்கள் அரை வட்ட வடிவில் வலம் வந்து பிரதட்சணம் செய்வது சிறப்பானதாகும். 

எந்தெந்த தெய்வத்தை எத்தனை முறை வலம் வந்து வழிபட வேண்டும்? | Number Of Times Pradakshinas And Its Benefits

வலம் வரும் எண்ணிக்கையும் அதன் பலன்களும்

11 முறை - ஆயுள் விருத்தியாகும்.

13 முறை- வேண்டுதல் நிறைவேறும். 

15 முறை- தன விருத்தி ஏற்படும். 

17 முறை- தானியம் சேரும், விவசாயம் செழிக்கும். 

19 முறை- நோய்கள், கடன் பிரச்சனை ஆகியவை நீங்கும்.

21 முறை- கல்வி விருத்தி உண்டாகும். 

23 முறை- சுக போகத்துடனான வசதியான வாழ்வு கிடைக்கும்.

108 முறை- குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

208 முறை- யாகம் செய்த பலன் கிடைக்கும்.   

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 


+91 44 6634 5005
Direct
+91 96001 16444
Mobile
bakthi@ibctamil.com
Email US