இந்த 4 தேதியில் பிறந்த நபர்களை எல்லோரும் விரும்புவார்களாம்
ஜோதிடத்தில் எண் கணிதம் என்பது மிகவும் பழமையான நம்பிக்கையாக இருந்தாலும் எண் கணிதம் கொண்டு நாம் ஒருவருடைய வாழ்க்கை குணாதிசயங்கள் மற்றும் தொழில் என அனைத்தையும் நாம் தெரிந்து கொள்ள முடியும்.
அப்படியாக ஒரு சில எண்களில் பிறந்தவர்களை எல்லோருக்கும் பிடிக்குமாம். அவர்கள் தேடி செல்லாமல் அவர்களிடம் எல்லோரும் வந்து பேசுவார்கள் என்று சொல்லப்படுகிறது. அவர்கள் யார்? எந்த எண்ணில் பிறந்தவர்கள் என்று பார்ப்போம்.

எண் 9:
அதாவது 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் மிகவும் அன்பானவர்களாகவும், பிறரிடம் நேர்மையாகவும் பழகக்கூடிய நபராக இருப்பார்களாம். இவர்களிடத்தில் நகைச்சுவை தன்மை சற்று அதிகமாக இருப்பதால் இவர்களுடைய பேச்சாற்றலை பலரும் விரும்பி இவர்களுடன் நட்பு வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புவார்கள்.
எண் 5:
அதாவது 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் மிகவும் தைரியசாலியாகவும் பொறுப்பாளர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் எந்த ஒரு விஷயத்தை செய்வதாக இருந்தாலும் புதிதாக யோசித்து செயல்படக்கூடிய தன்மை இருப்பதால் இவர்களுடைய செயல்கள் பலருடைய ஈர்ப்பை பெற்று அனைவராலும் விரும்பக் கூடிய நபராக இருக்கிறார்கள்.
நவராத்திரி: துர்கா தேவிக்கு மிகவும் பிடித்த 5 ராசிகள்- அதிர்ஷ்டம் எப்பொழுதும் இவர்களுக்கு இருக்குமாம்
எண் 1:
அதாவது 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் மிகவும் அர்ப்பணிப்பு குணம் கொண்ட கலைஞர்களாக இருப்பார்கள். இவர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களுடைய பதில்களையும் புத்திசாலித்தனத்தையும் பயன்படுத்தி வெற்றி பெறக்கூடிய நபராக இருப்பதால் இவர்களுடைய புத்தி கூர்மையால் பலராலும் ஈர்க்கப்பட்டு இவர்களிடம் நட்பு வைத்துக்கொள்ள விரும்புவார்கள்.
எண் 3:
அதாவது 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் எல்லோரிடத்திலும் மிக அன்பாகவும் எளிமையாகவும் பழகக் கூடியவர். அதேபோல் இவர்களுடைய புன்னகை கொண்டு ஒருவரை ஈர்க்கும் தன்மை பெற்றிருப்பார்கள். மேலும் இவர்கள் அதிக அளவில் பொழுதுபோக்கையும் விளையாட்டு தன்மையும் விரும்பும் நபர்களாக இருப்பதால் இவர்களுடன் பழகி நல்ல நேரத்தை செலவிட வேண்டும் என்று பலரும் விரும்புவார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |