குலதெய்வத்திற்கு இந்த பொருட்களை படைத்து வழிபாடு செய்தால் வாழ்க்கையே மாறுமாம்

By Sakthi Raj Oct 04, 2026 05:52 AM GMT
Report

   குலதெய்வம் நம்முடைய குலம் காக்கும் தெய்வமாக இருக்கிறார்கள். அந்த வகையில், குலதெய்வத்திற்கு எந்த பொருட்கள் சமர்ப்பித்து வழிபாடு செய்தால் என்ன பயன்கள் என்று பார்ப்போம்.

குலதெய்வத்திற்கு தேங்காய் படைத்து வழிபாடு செய்கின்ற பொழுது நம்முடைய தடைகள் யாவும் விலகி புதிய தொடக்கம் கிடைக்கும்.

சர்க்கரை பொங்கல் படைத்து வழிபாடு செய்கின்ற பொழுது நல்ல பண வரவு கிடைக்கும், விருப்பங்கள் நிறைவேறும். வீடுகளில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும்.

குலதெய்வத்திற்கு இந்த பொருட்களை படைத்து வழிபாடு செய்தால் வாழ்க்கையே மாறுமாம் | Offering This Things To Kuladeivam Bring Blessings

கடக ராசியினர் தொழிலில் கொடி கட்டி பறப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?

கடக ராசியினர் தொழிலில் கொடி கட்டி பறப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?

தயிர் படைத்து வழிபாடு செய்கின்ற பொழுது குடும்பத்தில் அமைதியும் சண்டை இல்லாத ஒரு வாழ்க்கையும் கிடைக்கும்.

எலுமிச்சை பழம் படைத்து வழிபாடு செய்கின்ற பொழுது கெட்ட சக்திகளும் கண்திருஷ்டிகளும் முற்றிலும் விலகுகிறது.

பூமாலை சாற்றி வழிபாடு செய்கின்ற பொழுது மனதில் நினைத்த காரியம் நடக்கும். குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும்.

மஞ்சள் படைத்து வழிபாடு செய்கின்ற பொழுது திருமண தடை யாவும் விலகும். பால் படைத்து வழிபாடு செய்கின்ற பொழுது மன அமைதி கிடைக்கும். நிம்மதி உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

வெற்றிலை பாக்கு சமர்ப்பித்து வழிபாடு செய்கின்ற பொழுது செல்வ வளம் கிடைக்கும். நல்ல வாய்ப்புகள் உருவாகும். நினைத்த காரியங்கள் நிறைவேறும்.

குலதெய்வத்திற்கு இந்த பொருட்களை படைத்து வழிபாடு செய்தால் வாழ்க்கையே மாறுமாம் | Offering This Things To Kuladeivam Bring Blessings

வாழ்க்கையில் துன்பம் இல்லாமல் வாழ இந்த 4 விஷயங்களை மட்டும் செய்தால் போதும்

வாழ்க்கையில் துன்பம் இல்லாமல் வாழ இந்த 4 விஷயங்களை மட்டும் செய்தால் போதும்

நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்கின்ற பொழுது அதிர்ஷ்டம் உண்டாகும். தெய்வத்தின் அருள் முழுமையாக நம்மை வந்து சேரும்.

குலதெய்வம் கோயிலுக்கு அன்னதானம் செய்து வழிபாடு செய்கின்ற பொழுது பெரிய புண்ணியம் கிடைக்கிறது.

பெண்கள் குலதெய்வத்திற்கு குங்குமம் படைத்து வழிபாடு செய்கின்ற பொழுது குடும்பத்தில் மங்களகரமான நிலை உருவாகும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US