கடக ராசியினர் தொழிலில் கொடி கட்டி பறப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
ஜோதிடத்தில் சந்திர பகவானுடைய ஆதிக்கத்தை கொண்ட கடக ராசியினர் அன்பும் பாசமும் மிகுந்த உணர்ச்சிமிக்கவர்களாகவும் இருக்கிறார்கள்.
அந்த வகையில், கடக ராசியினர் தொழில் வாழ்க்கையில் எந்த விஷயங்களை பின்பற்றினால் மிக உயரத்தை தொடலாம் என்பதை பற்றி பிரபல ஜோதிட ராம்ஜி சுவாமிகள் அவர்கள் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். அதைப்பற்றி பார்ப்போம்.
கடக ராசியை பொறுத்தவரை இவர்கள் பிறரை பராமரிக்கக் கூடிய தொழில் மிகவும் உகந்ததாக இருக்கிறது. அதாவது முதியோர் இல்லங்கள், விடுதிகள், குழந்தை பராமரிப்பு மையங்கள் ஆகியவை இவர்களுக்கு மிகுந்த பலன் அளிக்கிறது.
காரணம் இவர்கள் ஒரு தாய்மை உள்ளம் கொண்டுள்ளதால் இந்த வேலை இவர்களுக்கு உகந்ததாக இருக்கிறது. கடக ராசிக்காரர்கள் உணவு விஷயங்களில் மிகுந்த அக்கறை காட்டுவதால் இவர்கள் உணவு விடுதிகள், உணவு தொடர்பான தொழிலையும் செய்யலாம் சிறப்பான பலன் கொடுக்கும்.
அதே போல், இவர்கள் பிசியோதெரபி, கர்ப்பிணி பெண்களுக்கான பராமரிப்பு தியான மையங்கள் போன்ற தொழில்களும் இவர்கள் சிறந்து விளங்கலாம். அதேபோல், சூரியன் தொடர்பு கொண்ட தொழிலாக இருக்கும் விஷயங்களும் இவர்களுக்கு நல்ல பலன் கொடுக்கும்.
கடக ராசியினர் மனிதர்கள் மேலாண்மை செய்வதில் வல்லவர்களாக இருக்கிறார்கள் ஆதலால் HR, Employee Relations (ER), மற்றும் Public Relations (PR) போன்ற துறைகளும் இவர்களுக்கு சிறப்பாக இருக்கிறது.
மேலும், அரசு வேலையை பொறுத்தவரை இவர்கள் சுகாதாரம் சமூக நலத்துறை மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலம் வீட்டு வசதி வாரியம் போன்ற துறைகளில் பணியாற்றுவது சிறப்பாக இருக்கும். கடக ராசியினருக்கு எந்த தொழில் மிகச் சிறந்த பலனை கொடுக்கும் என்று இந்த காணொளியை பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |