திருப்பதியில் அன்னதானம் வழங்க விருப்பம் இருக்கா? 1 நாள் நன்கொடை எவ்வளவு தெரியுமா

By Sumathi Mar 04, 2025 07:55 AM GMT
Report

திருப்பதி கோவிலில் அன்னதானம் வழங்க விரும்புவோர் அளிக்கவேண்டிய தொகை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருப்பதி

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர். தினமும் பல்லாயிரக்கணக்கானோர் தரிசனம் செய்கின்றனர்.

tirupati

இவர்களுக்கு திருமலையில் மாத்ரு ஸ்ரீ தரிகொண்டா வெங்கமாம்பாள் கூடத்தில் தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது.

பக்தர்கள் செலுத்தும் காணிக்கை மற்றும் அரசு வங்கிகளில் டெபாசிட் செய்துள்ள பணத்தில் இருந்து கிடைக்கும் வட்டியில் இருந்து இந்த அன்னதானம் வழங்கப்படுகிறது.

திருப்பதி வேங்கடவனும் லட்டு பிரசாதமும்

திருப்பதி வேங்கடவனும் லட்டு பிரசாதமும்

அன்னதான விவரம்

மேலும், திருமலையில் உள்ள வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ், பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களிலும், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில், கோவிந்தராஜர் கோயில், விஷ்ணு நிவாசம், மாதவம் விடுதிகள் என பல இடங்களில் தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது.

annadanam

இந்நிலையில், ஒரு நாள் அன்ன பிரசாதத்திற்கு நன்கொடை வழங்க விரும்புவோர் ரூ.44 லட்சம் செலுத்தலாம். காலை சிற்றுண்டிக்கு மட்டும் ரூ.10 லட்சமும், மதிய அல்லது இரவு உணவிற்கு ரூ.17 லட்சமும் நன்கொடையாக வழங்கலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US