வீடுகளில் தொடர்ந்து இத 1 விஷயம் செய்தால் தீய சக்திகளே நெருங்காதாம்
நம்முடைய முன்னோர்கள் நிறைய ஆன்மீக விஷயங்களை பின்பற்றி வாழ்ந்து வந்தார்கள். அதாவது அவர்கள் அனுபவ ரீதியாக நிறைய அறிந்து கொண்டு அதை அவர்கள் பின்பற்றி வீடுகளில் தொடர்ந்து கடைபிடித்து வந்தார்கள். அப்படியாக அவர்கள் பின்பற்றிய நிறைய சக்தி வாய்ந்த வழிபாடுகளில் தூப வழிபாட்டு முறையும் ஒன்று.
அவர்கள் வீடுகளில் தூப வழிபாட்டை முறையாக பின்பற்றி வர முக்கிய காரணம் இந்த தூது வழிபாடுகளை நம் வீடுகளில் செய்யும் பொழுது நம் வீடுகளில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல் முற்றிலும் விலகி குடும்பத்தில் ஏதேனும் சண்டைகள், பொருளாதார கஷ்டங்கள் இருந்தால் அவை விலகும் என்பதால்.
பொதுவாகவே தூபத்தின் வாசனையானது நம்முடைய மனதையும் நாம் இருக்கும் இடத்தையும் மிகவும் சுத்தப்படுத்தக்கூடிய தன்மை கொண்டது. தூப வழிபாட்டின் முக்கியத்துத்தை சாஸ்திரங்களிலும் ஆகமங்களிலும் சொல்லப்பட்டிருக்கிறது.

அதாவது நாம் தூபம் போட்டுக் கொண்டிருக்கும் பொழுது குடும்பத்தில் இருப்பவர்களுடைய மனதில் ஓரு புத்துணர்ச்சியான மாற்றத்தையும் நேர்மறை ஆற்றல் உருவாகுவதையும் பார்க்கலாம். அதுமட்டுமல்லாமல் வீட்டிற்குள் தேவையில்லாத எதிர்மறை ஆற்றல்கள் நுழைவதை அது தவிர்த்து விடுகிறது. புராணங்களில் "தூபம் எம பயம் போக்கும்" என்று சொல்லப்பட்டிருக்கிறது.
ஆதலால் தொடர்ந்து அவை நம் வீடுகளில் போட்டு வரும் பொழுது நிச்சயம் நல்ல மாற்றம் உண்டாகும். யாராவது நீண்ட நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து கொண்டிருந்தால் அவர்கள் தொடர்ந்து வீடுகளில் தூபம் போட்டு வர அந்த மன அழுத்தம் படிப்படியாக குறைந்து விடும்.
மேலும் சிவாலயங்களில் கூட நாம் தீபாரதனைக்கு முன் தூபம் இடுவது சக்தி வாய்ந்த சடங்காக கருதப்படுகிறது. இதைவிட முக்கியமாக பெரிய புராணத்தில் வரும் குங்கிலிய கலய நாயனார் கதை இதற்கு ஒரு மிகப்பெரிய சான்று. அதாவது வறுமை அவரை சூழ்ந்தபோதும் மனம் தளராமல் தூபம் போட்டு அவர் இறைவனை வழிபாடு செய்து வந்தார்.
அதன் பயனாக அவருக்கு செல்வ நிறைவான வாழ்க்கையை இறைவன் அருளிச் செய்தான். இதனால் தான் தூப வழிபாடு மன நெருக்கடிகளையும் பொருளாதார கஷ்டத்தையும் போக்கும் என்ற உண்மை புரிகிறது.

மேலும் தூபத்தில் பயன்படுத்தப்படும் அகில் குங்கிலியம் சாம்பிராணி போன்றவை இயற்கையாக மருத்துவ ரீதியாக நமக்கு நிறைய பயன் அளிப்பதாக சொல்கிறார்கள். இவை வீட்டிற்குள் நுழையும் கிருமிகளை தடுத்து மன அமைதியை கொடுக்கிறது. ஆதிகாலங்களில் பெண்கள் தலைக்கு குளித்து விட்டால் கட்டாயமாக அவர்களுடைய முடியை உலர்த்த தூபம் பயன்படுத்துவார்கள்.
இதனால் அவர்களுடைய மனமும் உடலும் சாந்தமடைந்து அவர்கள் வாழ்க்கையில் ஒரு பிரகாசமான நிலையிலும் மனம் தளராத ஒரு வாழ்க்கையும் வாழ்வதற்கான ஒரு பாதுகாப்பு தூபமானது கொடுக்கிறது.
ஆக இவ்வளவு அற்புதங்கள் நிறைந்த தூப வழிபாட்டினை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் வீடுகளில் செய்து வர நிச்சயம் நல்ல மாற்றம் கிடைக்கும். அது மட்டும் அல்லாமல் குங்கிலியம் அல்லது சாம்பிராணி தூபம் போடுவது நிச்சயம் வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை சக்திகளையும் நெருக்கடியான சூழலையும் போக்கி ஒரு நல்ல மாற்றத்தை கொடுக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |