ஒருவருக்கு கொள்ளி வைத்த பிறகு இந்த ஒரு விஷயம் செய்யக்கூடாது? ஏன் தெரியுமா?
நம்முடைய இந்து மத மரபின்படி ஒவ்வொரு சாஸ்திரத்திற்கு பின்பும் ஒவ்வொரு காரணங்களும் பாரம்பரியமான விஷயங்களும் இருக்கிறது. அதை நாம் சற்று தீர ஆராய்ந்து பார்க்கும் பொழுது நமக்கு பல ஆழமான விஷயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது.
அதாவது, சாஸ்திர ரீதியாக செய்யக்கூடிய விஷயங்கள் வெறும் நம்பிக்கையாக மட்டுமல்லாமல் நம்முடைய நடைமுறை வாழ்க்கைக்கு உகந்ததாகவும் இருக்கிறது. அப்படியாக ஒரு மனிதன் இறந்து அவனுக்கான இறுதி காரியங்களை செய்யும்பொழுது நாம் நிறைய விஷயங்களை பின்பற்றுகிறோம். அந்த வகையில் அவர்களுக்கு கொள்ளிவைத்த பிறகு நாம் திரும்பிப் பார்க்காமல் செல்ல வேண்டும் என்று சொல்லுவார்கள்.
அவ்வாறு ஏன் சொல்லப்படுகிறது என்பதை பற்றி கருட புராணத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது. அதை பற்றி பார்ப்போம். மனிதனுடைய இறப்பு என்பது முடிவல்ல. அது அவர்களுடைய ஒரு மாற்றம் அடுத்த வாழ்க்கைக்கான புதிய தொடக்கமாகும்.

அந்த வேளையில் ஒரு உயர் ஒரு உடலை விட்டு பிரிந்து இன்னொரு உடலை நோக்கி பயணம் செய்வதாக நாம் நம்புகிறோம். அதனால் அவர்களுடைய பயணம் எந்த ஒரு தடங்கலும் இல்லாமல் இருப்பதற்காக செய்யக்கூடிய புனித சடங்கின் பெயர் தான் 'அந்த்யேஷ்டி'.
அப்படியாக, இந்து மத சாஸ்திரத்தின் படி இறந்த ஒருவரின் உடலை நெருப்பு வைத்து எரிக்கும் பொழுது கருட புராணத்தின் படி அவர்கள் அடுத்த உலகிற்கு பயணம் செல்வதாக சொல்லப்படுகிறது. இதனால் அந்த நேரத்தில் நாம் செய்யக்கூடிய ஒரு தவறான சிறிய விஷயம் கூட அந்த ஆன்மாவினுடைய பயணத்தை பாதிக்கப்படும் என்று சொல்கிறார்கள்.
மேலும் ஒருவருடைய உடல் எரிக்கும் பொழுது அவர்களுடைய ஆன்மா அந்த இடத்தை விட்டு உடனடியாக வெளியேறுவதில்லை என்றும் சொல்கிறார்கள். அந்த ஆன்மாவானது அந்த தகன மைதானத்திற்கு அருகில் சிறிது காலம் தங்கி இருக்குமாம். அவ்வாறு இருக்கக்கூடிய ஆன்மா அவர்களுடைய பழைய வாழ்க்கையை கவனித்துக் கொண்டிருப்பதாக சொல்கிறார்கள்.
இதைவிட முக்கியமாக ஆன்மாவானது பழைய நினைவுகளுடன் பூமியில் காந்தம் போல் இழுக்கப்பட்டு ஒரு இக்கட்டான நிலையில் இருக்குமாம். ஆதலால் நாம் இறுதி சடங்கிற்கு சென்று கொள்ளி வைத்த பிறகு நாம் ஆன்மாவை திரும்பி பார்க்கும் பொழுது அவர்களுக்கு தவறான புரிதலை உண்டாக்கும் என்று சொல்கிறார்கள்.
அதாவது அவர்களுடைய குடும்பத்தினர் இன்னும் அவர்களை விட்டு பிரிய மனமில்லாமல் இருப்பதாக அழுகிறார்கள் என்று அந்த ஆன்மா உணர்ந்து அதனுடைய வலியை மிகக் கடுமையாக கொள்கிறது. ஆதலால் அந்த பிணைப்பை அவர்கள் முறித்துக் கொள்ள முடியாமல் அந்த ஆன்மா அங்கேயே நின்று விடுகிறது.

ஆதலால் கொள்ளி வைத்த பிறகு நாம் திரும்பிப் பார்க்காமல் செல்லும் வேளையில் அந்த ஆன்மாவிற்கு நாம் ஒரு செய்தியை விட்டுச் செல்வதாக சொல்கிறார்கள். அதாவது உங்களுடைய இந்த பயணம் ஆனது நல்ல முறையில் முடிந்துவிட்டது.
நீங்கள் உங்களுடைய அடுத்த பயணத்திற்கான ஒரு தொடர்பை மிக மென்மையாகவும் எளிதாகவும் தைரியமாகவும் எதிர்கொள்ளுங்கள் என்று ஒரு செய்தியை கொடுத்து அவர்களுக்கும் அந்த ஆன்மாவிற்குமான இறுதிபந்தத்தை நல்ல முறையில் முடித்துக் கொள்ளக்கூடிய ஒரு இடமாக இருக்கிறது என்கிறார்கள்.
மேலும் இதை நாம் சற்று தீவிரமாக ஆராய்ந்து பார்க்கும் பொழுது நாம் நெருங்கிய ஒருவரை இழக்கும் நேரத்தில் நம்முடைய மனமானது வலியில் துடித்து விடும். அவர்களை கடந்து செல்வதற்கு மிகவும் துன்பப்படும்.
ஆக அவர்கள் இந்த உலகில் இல்லை என்பதை ஒரு ஆழமான கருத்தாக நம் மனதிற்கு தெரிவித்து முன்னோக்கி செல்ல வேண்டும் என்பதையும் உணர்த்தக்கூடிய ஒரு செயலாக அவை அமைகிறது. அதைவிட முக்கியமாக கல்லறைகள் மிகவும் எதிர்மறையான ஆற்றல்களைக் கொண்டது. நாம் உணர்ச்சி ரீதியாக ஒருவரை இழந்து நிற்கும் பொழுது அதிக நேரம் அங்கே நின்று கொண்டிருந்தாலும் அவை நம்முடைய மனதையும் ஆரோக்கியத்தையும் பாதிக்ககூடும்.
ஆக நாம் இவ்வாறு செய்யக்கூடிய ஒரு செயலானது ஒரு மிகப்பெரிய பொறுப்பாக பார்க்கப்படுகிறது. அவை நமக்கும் இறந்த ஆன்மாவுக்கும் செலுத்தக்கூடிய ஒரு மரியாதையாகவும் ஒரு நல்ல உறவு முறையையும் சுட்டிக்காட்டுகிறது. இவ்வாறு செய்யும் பொழுது தான் அவர்கள் வேறொரு உடலுக்கும் உலகத்திற்கும் அமைதியாக செல்ல முடியும் என்கிறார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |