இந்த 12 ராசிக்காரர்களால் இந்த ஒரு விஷயத்தை மட்டும் செய்யவே முடியாதாம் என்ன தெரியுமா ?
ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணாதிசயம் இருக்கும். அந்த வகையில், ஒரு சில குணங்களை அவர்களால் எவ்வளவு முயற்சி செய்தாலும் மாற்ற முடியாது. அந்த வகையில் 12 ராசிக்காரர்களுக்கும் எந்த ஒரு விஷயம் வரவே வராது என்பதை பற்றி பார்ப்போம்.
மேஷம்:
இவர்களுக்கு பொறுமை என்பது சுட்டுப் போட்டாலும் வரவே வராத ஒன்று. எப்பொழுதும் அவசரமாக செயல்பட கூடியவர்கள்.
ரிஷபம்:
யாருக்காகவும் இவர்களுடைய பிடிவாதத்தை விட்டே கொடுக்க மாட்டார்கள். மன அழுத்தக்காரர்களாக இருக்கிறார்.
மிதுனம்:
இவர்களுக்கு ஒரு இடத்தில் அமைதியாக இருப்பதே வராது. ஏதேனும் ஒரு விஷயத்தை செய்து கொண்டு இருப்பார்கள்.
கடகம்:
எந்த ஒரு விஷயத்தையும் மனதில் இவர்களால் வைத்துக் கொள்ள முடியாது. யாரிடமாவது உளறி விடுவார்கள்.
சிம்மம்:
அவமானப் படும் சூழ்நிலை வந்தாலும் தலைகுனிய மாட்டார்கள். தன்மானத்துடன் இருப்பார்கள்.
கன்னி:
இவர்களுக்கு அசுத்தம் சுத்தமாக பிடிக்காது. எப்பொழுதும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
துலாம்:
இவர்களால் தெளிவாக எந்த நேரங்களிலும் செயல்பட முடியாது. குழப்பத்திலேயே இருப்பார்கள்.
விருச்சிகம்:
யாரையும் உடனடியாக நம்பவே மாட்டார்கள். கல் நெஞ்சக்காரர்கள். தனுசு: இவர்கள் எப்பொழுதும் ஒரே இடத்தில் இருக்க மாட்டார்கள். சுத்தி கொண்டே இருப்பார்கள்.
மகரம்:
இவர்களால் சோம்பேறித்தனமாக ஒரு நிமிடம் கூட இருக்கவே முடியாது. சுழன்று கொண்டே இருப்பார்கள்.
கும்பம்:
நேரத்தை இவர்களால் வீணடிக்கவே முடியாது. நேரம் இவர்களுக்கு மிகவும் முக்கியமானது.
மீனம்:
யாருடைய மனமும் புண்படும்படி இவர்களால் பேச முடியாது. மிகவும் தூய மனம் கொண்டவர்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |