வீட்டில் துர்சக்தியை விரட்டி செல்வ செழிப்பை அள்ளித்தரும் பச்சை கற்பூரம்
நம் வீடுகளில் எதிர்மறை ஆற்றல் இருப்பது இயல்பு என்றாலும் அதை நாம் அப்படியே விட்டு விடமுடியாது. வீடுகளில் உள்ள தீய சக்திகள் சூழ்ந்து விட்டால் நாம் பல பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். அப்படியாக, வீடுகளில் உள்ள துர்சக்தியை விரட்டி செல்வ செழிப்பை கொண்டு வர நாம் செய்யவேண்டிய பச்சை கற்பூரம் பரிகாரம் பற்றிப் பார்ப்போம்.
அதாவது வீடுகளில் ஒரு மஞ்சள் துணியில் பச்சை கற்பூரத்தை முடிச்சாக கட்டி குபேர மூலையில் வைத்து தூபம் காண்பித்து தினமும் வழிபாடு செய்து வந்தால் நம் வீடுகளில் உள்ள பணப்பிரச்சனை விலகும்.
இந்த பச்சை கற்பூரம் அதிக வாசனை நிறைந்தவை. மேலும், அந்த வாசனைக்கு பெரிய அளவில் சக்தி இருக்கிறது. இதனால் வீடுகளில் பச்சை கற்பூரத்தை பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்யும் பொழுது வீடுகளில் நிம்மதி உண்டாகிறது.
அதாவது, பச்சை கற்பூரத்தின் வாசனையால் துர்சக்திகள் நம் வீட்டை விட்டு வெளியே செல்கிறது. அதுமட்டுமல்லாது பச்சை கற்பூரத்திற்கு பணத்தினை ஈர்க்கும் தன்மை கொண்டது.
ஆதலால் வீடுகளில் ஏற்பட்ட கடன், பண இழப்புகள் எல்லாம் விலகி பணம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.
அதேப்போல், 2 பச்சை கற்பூரத் துண்டை ஒரு பேப்பரில் வைத்து மடித்து நம்முடைய பர்சில் வைத்துக்கொண்டால் வீண் செலவுகள் எதுவும் ஏற்படாமல் தடுக்கிறது.
மேலும், பச்சை கற்பூரத்தை எடுத்து குலதெய்வத்தையும், இஷ்டதெய்வங்களையும் மனதார வணங்கி நமக்கு வேண்டியவற்றை நினைத்து பிரார்த்தனை செய்து அந்த பச்சை கற்பூரத்தை டப்பாவில் போட்டு வைத்துவிட வேண்டும்.
இப்படி செய்து வாந்தால் வீடுகளில் நடக்கும் நல்ல மாற்றத்தை காணலாம். அதோடு நம் வீடுகளில் உள்ள எதிர்மறை ஆற்றல், கண் திருஷ்டி போன்றவை எல்லாம் அடியோடு விலகுகிறது.
பொதுவாக, வாசனை மிகுந்த இடங்களில் மகாலட்சுமி குடிகொள்வதாக ஐதீகம். ஆதலால் பணம் புழங்கும் இடங்களில் வாசனை மிக்க இந்த பச்சை கற்பூரமானது இருந்தால் செல்வம் செழிக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |