500 ஆண்டுகள் பழமையான பச்சைவாழியம்மன் கோவிலின் சிறப்புகள்
கடலூர் மாவட்டம் எழுமேடு கிராமத்தில் சுமார் 500 ஆண்டுகள் பழமை கொண்ட பச்சைவாழியம்மன் கோவில் அமைந்துள்ளது.
புராணத்தின்படி, வயல்வெளிகள் சூழ்ந்த இந்த கிராமத்தையும் மக்களையும் காக்க, அம்மன் ஒரு பச்சை மரத்தின் மீது குடியமர்ந்ததாக கூறப்படுகிறது.
இதனை பெரியவரின் கனவில் சென்று அம்மன் கூறியதாகவும், பின்னர் மக்கள் கோவில் கட்டி அம்மன் சிலையை பிரதிஷ்டை செய்ததாகவும் நம்பப்படுகிறது.
இந்த கோவிலில் எப்போதும் அம்மனுக்கு பச்சை நிற சேலையே அணிவிக்கப்படுகிறது.
பக்தர்களும் காணிக்கையாக பச்சை நிற புடவைகளை செலுத்துகின்றனர்.
இந்த கிராமத்தின் காவல் தெய்வமாக வணங்கப்படும் பச்சைவாழியம்மனுக்கு பூஜையின் போது சிலம்பு மற்றும் உடுக்கை இசையுடன் வழிபாடு நடத்தப்படுவது தனிச்சிறப்பாகும்.
கோவில் பிரகாரத்தில் கொடிமரம், குதிரை வாகனம் மற்றும் கருப்பண்ணசாமி சன்னிதியும் உள்ளது.
ஊர் மக்கள் எந்த சுப நிகழ்ச்சிக்கும் முன்பாக அம்மனுக்கு எலுமிச்சம் பழ மாலை சாற்றி, காரியம் நல்லபடியாக நடக்க வேண்டுமென வேண்டிக்கொள்கிறார்கள்.
எலுமிச்சம் பழம் கீழே விழுந்தால், அந்த காரியம் வெற்றி பெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |