நிரம்பிய பழனி முருகனின் உண்டியல்.., காணிக்கை மட்டும் எத்தனை கோடி தெரியுமா?
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயில் உலகப் பிரசித்தி பெற்ற கோயிலாகும்.
இங்கு தரிசனம் செய்ய தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிகின்றனர்.
மேலும், இக்கோவிலுக்கு விஷேச நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் வருகை தருவது வழக்கமான ஒன்று.
இந்நிலையில், பழனியில் தமிழக அரசு முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தப்பட்டது.
மேலும், விநாயகர் சதுர்த்தி, தொடர் விடுமுறை ஆகியவற்றின் காரணமாக பழனியில் பக்தர்களின் வருகை அதிகரித்து காணப்பட்டது.
இதன்மூலம், கோயிலில் உள்ள உண்டியல்கள் 39 நாட்களில் நிரம்பிய நிலையில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று தொடங்கியது.
முதல் நாள் எண்ணிக்கையில், 3 கோடியே 32 லட்சம் ரூபாய் ரொக்கம் கிடைத்தது. மேலும், தங்கத்தாலான வேல், தாலி, மோதிரம், சங்கிலி, தங்கக்காசு ஆகியவை கிடைத்தது.
வெள்ளியாலான காவடி, வளையம், வீடு, தொட்டில், கொலுசு, பாதம் ஆகியவற்றையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
இதேபோல, வெளிநாட்டு கரன்சிகளும் காணிக்கையாக கிடைத்த நிலையில் இன்றும் உண்டியல் காணிக்கை எண்ணப்பட உள்ளது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |