பாண்டவர்கள் வழிபட்ட சிவ பெருமான்
மஹாபாரதத்தில் பாண்டவர்கள் கேள்வி பட்டு இருப்போம்.அப்படியாக அந்த பாண்டவர்கள் வழிபாடு செய்த சிவன் கர்நாடகாவில் இருக்கிறார்.அதை பற்றி பார்ப்போம்.
கர்நாடக மாநிலம் மங்களூருவில் பாண்டேஸ்வரர் என்னும் பெயரில் சிவா பெருமான் மக்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இவருக்கு தாராபிேஷகம் செய்தால் தடங்கல் இன்றி திருமணம் நடக்கும் என்பது அங்கு இருக்கும் மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
ஒரு முறை பாண்டவர்களில் மூத்தவரான தர்மர் சூதாட்டத்தில் தோற்றுப்போனார். ஆதலால் அவர்களின் மனைவி திரவுபதியை பலர் முன்னிலையில் கவுரவர்களில் மூத்தவனான துரியோதனன் அவமானப்படுத்தினான்.
அவமானம் தாங்காத அவள், 'குருக்ஷேத்திர போரில் துரியோதனனின் தலை உருண்டால் தான் என் கூந்தலை அள்ளி முடிவேன்' என சபதமிட்டாள். இதன் பிறகு பாண்டவர்கள் காட்டிற்குப் புறப்பட்டனர்.
ஓரிடத்தில் அவர்கள் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்தனர். அந்த லிங்கம் இருந்த இடத்தில் கோயில் உருவானது. சுவாமிக்கு 'பாண்டேஸ்வரர்' எனப் பெயர் வந்தது.
கோயில் முகப்பில் பிரம்மாண்டமான சிவன், நந்தி சிலைகள் உள்ளன. பஞ்சுளி, முண்டித்தாயா, வைத்தியநாதர், லட்சுமிநாராயணர் சன்னதிகள் உள்ளன.
சிவனின் ஜடாமுடி கருவறையைச் சுற்றி விரிந்து கிடப்பதாக கரு
தப்படுவதால் கருவறையைச் சுற்றுவதில்லை. கார்த்திகை சோம வார நாட்களில் ருத்ர யாகம், ருத்ரபூஜை நடத்துகின்றனர்.
இதைத் தரிசித்தால் எதிரி தொல்லை மறையும்.மேலும் நாகதோஷம் உள்ளவர்கள் அந்த தோஷம் நீங்க அன்று காலை 10:30 - 12:00 மணிக்குள் ராகு காலத்தில் பாம்பு புற்றில் பால் ஊற்றுகின்றனர்.
பாண்டேஸ்வரருக்கு ஜலதாரை வழிபாடு நடக்கிறது. 108 துளைகள் இடப்பட்ட கலசத்தில் புனித நீர் நிரப்பப்பட்டு கருவறையில் சிவலிங்கம் மீது கட்டப்படுகிறது.
இதன் துளை வழியாக சுவாமிக்கு அபிஷேகமாவதை 'தாராபிஷேகம்' என்கின்றனர். தடைகள் விலகி திருமணம் நடக்கவும், குழந்தைப்பேறு, வேலைவாய்ப்பு கிடைக்கவும் இந்த வழிபாட்டைச் செய்கின்றனர்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |