நீண்டநாள் திருமண ஏக்கமா? இந்த பங்குனி உத்திரத்தில் இதை மட்டும் பண்ணுங்க!
திருமண யோகம் கிடைக்க செய்யும் பங்குனி உத்திர பூஜைகளை தெரிந்துக்கொள்வோம்.
திருமண யோகம்
ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு நட்சத்திரம் சிறப்பானதாக கருதப்படுவதை போல் பங்குனி மாதத்தில் உத்திரம் நட்சத்திரம் சிறப்பானதாக கருதப்படுகிறது.
அதன்படி, பங்குனி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் இணைந்து வரக்கூடிய நாள் தான் பங்குனி உத்திரம். இந்த வருடம் 2025 ஏப்ரல் பத்தாம் தேதி பிற்பகல் 12 மணி முதல் தொடங்கி ஏப்ரல் 11ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு முடிகிறது.
பங்குனி உத்திரம்
இந்நாளில் சிவன் பார்வதி, ராமர் சீதை, பெருமாள் மகாலட்சுமி தேவி, முருகனுக்கும் தெய்வானைக்கும் திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. எனவே, திருமணம் வரம் வேண்டுவோர் விரதம் இருந்து வழிபாடு செய்தால் நினைத்தது நடைபெறும் என்பது ஐதீகம்.
கன்னிப் பெண்கள் அதிகாலையில் எழுந்து கல்யாண விரதம் கடைப்பிடித்து அருகில் உள்ள ஆலயங்களுக்கு சென்று திருமணக் கோலத்தில் உள்ள சிவன்-பார்வதி, திருமால்-மகாலட்சுமி, முருகன்-தெய்வானை போன்ற கடவுள்களை தரிசித்தால் கூடிய விரைவில் திருமண வைபோகம் கிடைக்கும்.
திருமணம் ஆன தம்பதிகள் 'ஒற்றுமையாக வாழ வேண்டும், கணவர் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும், நல்லபடியாக குழந்தைகள் பிறக்க வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டு கோயிலுக்கு சென்று வருவது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.