பில்லி சூனியம் சூழ்ந்துள்ளதாக நினைத்தால் இந்த ஒரு விஷயத்தை மட்டும் செய்யுங்கள்
இந்த உலகத்தில் ஒரு சில விஷயங்கள் நம்முடைய நம்பிக்கை மீறிய விஷயமாக இருக்கிறது. அதில் ஒன்றுதான் எதிர்மறை ஆற்றல்களும் தீய சக்திகளும் பில்லி சூனியம் ஏவல் போன்ற விஷயங்களும். இதில்ஏவல் என்றால் ஏவி விடுதல் என்பது பொருள். சூனியம் என்பதற்கு ஒன்றுமில்லாதது என்று பொருள் ஆகும்.
ஒரு மனிதனின் மனதைக் குழப்பி அவனை ஒன்றுமில்லாமல் செய்து, அவனைச் எந்த ஒரு செயலையும் செய்யவிடாமல் முடக்குவதே சூனியம் ஆகும். பில்லி என்பதும் இந்த வகையைச் சேர்ந்ததே. அப்படியாக இந்த பில்லி சூனியம் ஏவல் போன்றவை ஒருவருடைய வளர்ச்சி பொறுக்காமல் அவர்களை வீழ்த்த வேண்டும் என்று இன்னொருவர் கையில் எடுக்கும் அற்ப ஆயுதம் ஆகும்.
அதாவது நேரடியாக மோதி காரியத்தை சாதிக்க முடியாதவர்கள் பலரும் இந்த எதிர்மறை மற்றும் தீய செயல்களில் ஈடுபட்டு காரியத்தை செய்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
அப்படியாக ஒருவர் உங்கள் வாழ்க்கையில் எதிர்மறை சக்திகள் சூழ்ந்து விட்டதாக அல்லது யாரேனும் பில்லி சூனியம் போன்ற விஷயங்களை செய்திருக்கிறார்கள் என்று நீங்கள் சந்தேகித்தால் இந்த ஒரு விஷயத்தில் செய்தால் போதும் கட்டாயம் உங்களை சூழ்ந்துள்ள அத்தனை தீய சக்திகளும் விலகிவிடும்.
பொதுவாக பில்லி சூனியம் ஏவல் போன்றவை நமக்கு நெருங்கியவர்கள் நம்முடைய உறவினர்கள் இவர்களால் தான் நமக்கு செய்யப்படுகிறது. இவ்வாறு ஒருவர் நமக்கு தீங்கு விளைவிக்கிறார்கள் என்றால் ஏதேனும் ஒரு சூழலில் அவர்களை சந்திக்க நேரும் பொழுது அவர்கள் கட்டாயம் நம்மை முகம் பார்த்தோ அல்லது கண் எதிரே நின்று பேச மாட்டார்கள்.
அவ்வாறு பேசும் பொழுது அவர்கள் வைத்த இந்த பில்லி சூனியம் போன்ற காரியங்களுக்கு சக்தி குறைந்து விடும் என்பதால் நமக்கு யார் இந்த தீங்கு விளைவிக்கிறார்களோ அவர்கள் நம்மை அதை செய்ததில் இருந்து நம்மை சந்திக்க வரமாட்டார்கள்.
மேலும் இந்த பில்லி சூனியம் போன்ற விஷயங்கள் தொடக்கத்தில் ஒரு சில சிரமங்களை கொடுப்பது போல் இருந்தாலும் கட்டாயமாக இறுதியில் பலன் என்னமோ வைத்தவர்களுக்கு தான் பாதகமாக சென்றடையும். இருந்தாலும் சமயங்களில் நமக்கு நேரம் சரி இல்லை என்ற ஒரு சூழல் இருந்தால் நாம் இந்த தீய சக்திகளில் பாதிக்கப்படலாம்.
அப்படியாக இவ்வாறான சூழலில் இருந்து விடுபட செய்ய வேண்டிய ஒரு எளிய விஷயம் என்னவென்றால் இயற்கையான நீரில் நீராடுவது. அதாவது மழை பெய்யும் பொழுது மழை நீரில் முழுமையாக நனைந்து விட்டாலும் நமக்கு ஏற்பட்ட எதிர்மறை தாக்கங்கள் குறைந்துவிடும் அல்லது மழை நீரை பிடித்து வைத்துக்கொண்டு அந்த நீரில் நீராடினாலும் நமக்கு ஏற்பட்ட தாக்கங்கள் குறையும்.
இதைத் தவிர்த்து புனித நீர்களில் நீராடுவது. அதாவது ஆறுகள் அல்லது கடல், அருவி குளங்கள் அருகில் இருக்கும் ஆலயங்களுக்கு சென்று குளித்து இறைவனை மனதார பூஜித்து வர உங்களுக்கு ஏற்பட்ட தாக்கங்கள் விலகும். இதைவிட முக்கியமான விஷயம் 48 நாட்கள் வெள்ளி செவ்வாய் கிழமைகளில் தவறாமல் வீடுகளில் சாம்பிராணி தூபம் போட்டு விடுங்கள்.
அதோடு குளிக்கும் பொழுது நீரில் ஒரு கைப்பிடி கல் உப்பை போட்டு குளித்து வந்தாலும் நமக்கு ஏற்பட்ட பில்லி, சூனியம், ஏவல் அல்லது எப்பேர்ப்பட்ட எதிர்மறை சக்திகளாக இருந்தாலும் அவை நம்மை விட்டு விலகுகிறது. அதோடு இந்த பாதிப்புகள் நம்முடைய ஜாதகத்தில் ராகு, கேது திசையோ, புத்தியோ, நடந்தால் இது போன்ற மாந்திரிக கோளாறுகளால் சில தாக்கத்தை கொடுக்கக்கூடும்.
அதனால் ராகு கேது திசையோ, புத்தியோ நடக்கும் வேளையில் நம் மனம் சற்று குழப்பமாக அல்லது பலம் இருந்து காணப்படும். அப்பொழுது நரசிம்மரை வழிபாடு செய்வது நமக்கு துணையாக இருக்கும். அந்த நேரங்களில் கந்தசஷ்டி கவசம் படிப்பது நம்மை கவசம் போல் பாதுகாக்கும்.
மேலும், கட்டாயம் நம்மிடம் உண்மையும் நம் மனதில் நல்ல எண்ணமும் இருக்கிறது என்றால் அதற்கு யார் எவ்வளவு பெரிய தீங்கு விளைவிக்க வேண்டும் என்று நினைத்தாலும் முதலில் சில கஷ்டங்களை சந்திக்கலாம் தவிர்த்து முடிவு இறுதியில் நமக்கு சாதகமாக அமையும் என்பதை நாம் என்றும் மறக்கக்கூடாது.
ஆதலால் நம்மை சுற்றி எத்தனை தீயவர்கள் இருந்தாலும் நாம் சரியாக இருக்கும் பொழுதும் மனதில் நீங்காத இறை சிந்தனை இருக்கும் பொழுதும்நம்மை எந்த ஒரு எதிர்மறை ஆற்றல்களும் அல்லது தீய சக்திகளும் சூழ்ந்து நம் வாழ்க்கையில் எந்த ஒரு தீய தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







