சின்ன திருச்செந்தூர் என்று அழைக்கப்படும் முருகன் எங்கு இருக்கிறார் தெரியுமா?

By Sakthi Raj Jul 02, 2024 11:00 AM GMT
Report

முருகன் என்றாலே அவரின் கோயில் மலையின் மீதும் கடல் அருகிலும் தான் நாம் பார்த்து இருப்போம்.தரை மட்டத்தில் முருகன் கோயில் இருப்பது சற்று குறைவு தான்.

ஆனால் இங்கு தரை மட்டத்திற்கு சற்று கீழாக தரையில் இருந்து 16 அடி கீழ் பாதாளத்தில் முருகனின் கோயில் காணப்படுகிறது.இக்கோயிலை சின்ன திருச்செந்தூர் என்று மக்கள் சொல்லி வழிபட்டு  வருகின்றனர்.அதை பற்றி பார்ப்போம்.

சின்ன திருச்செந்தூர் என்று அழைக்கப்படும் முருகன் எங்கு இருக்கிறார் தெரியுமா? | Pathala Murugan China Thiruchendure Tharisanam

திண்டுக்கல் மாவட்டம் இராமலிங்கப்பட்டியில் பிரசித்திபெற்ற பழமைவாய்ந்த முருகன் கோவில் அமைந்துள்ளது.இங்கு 16 அடி பாதாளத்தில் கோயில் அமைந்து உள்ளதால் இக்கோயிலில் உள்ள முருகப் பெருமானை பாதாள செம்பு முருகன் என்று அழைக்கின்றனர்.

இக்கோயிலில் நிறைய விசேஷங்கள் நிறைந்து இருக்கிறது.

அப்படியாக இக்கோயிலில் முக்கிய சிறப்பு என்னவென்றால் இங்கு பிற கோயில்கள் போல் கட்டண தரிசனம் கிடையாது.

செய்வாய் கிழமை நாம் கடைபிடிக்கவேண்டிய முக்கியமான ஆன்மீக தகவல்கள்

செய்வாய் கிழமை நாம் கடைபிடிக்கவேண்டிய முக்கியமான ஆன்மீக தகவல்கள்


மேலும் இக்கோயில் முருகன் உண்டியலில் போடப்படும் காணிக்கையை அக்கோயிலின் அன்னதானத்திற்கு கோயில் நிர்வாகம் பயன் படுத்துகிறது.அப்படியாக இங்கு மதியம் 1 மணி வரையிலும் அன்னதானம் நடைபெறுகிறது.

இங்கு உள்ளூர் மக்கள் மட்டும் இன்றி வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து பாதாள செம்பு முருகனை தரிசனம் செய்கின்றனர்.

இகோயிலில் கூடுதல் சிறப்பாக எங்கும் இல்லாதது போல் பக்தர்களுக்கு என்று தனி நூலகம் ஒன்று அமைக்கப்பட்டு இருக்கிறது.

சின்ன திருச்செந்தூர் என்று அழைக்கப்படும் முருகன் எங்கு இருக்கிறார் தெரியுமா? | Pathala Murugan China Thiruchendure Tharisanam

மேலும் வராஹி அம்மனுக்கு என்று பிரகாரம் இங்கு கட்டப்பட்டு வருகிறது. பொதுவாக அந்த காலத்தில் கருங்காலி மரத்தைக் கோவில்களில் உலக்கையாகவும், கலசத்திலும் நேர்மறை எண்ணங்களுக்கும், கோவிலில் சுவாசிக்கப்படும் காற்றில் மருத்துவ குணம் கலந்திருக்க வேண்டும் என்பதற்காகப் பயன்படுத்தப்பட்டன.

காலப்போக்கில் கருங்காலி மரத்தின் நன்மைகளை மறந்து விடக்கூடாது என்று ஒரு நினைவாகக் கழுத்தில் மாலையாக அணிந்து கொண்டனர். இங்கு விற்கப்படும் கருங்காலி மாலை ஆனது முருகனிடம் வைத்து பிரார்த்தனை செய்து விட்டு அணிவார்கள்.

மேலும் இங்கு மாற்றுத்திறனாளிகளுக்குக் கருங்காலி மாலை இலவசமாக வழங்கப்படுகிறது.

இந்த கோவிலில் முருகனின் சிறப்பம்சம் பார்த்தால், இந்த கோவிலில் பிரதிஷ்டை சிலையானது சக்தி வடிவத்தைக் குறிக்கும்.

ஏனென்றால் இந்த கோவிலில் முருகனது வேல் இடது புறத்தில் காணப்படும்.

மேலும் இங்குத் தயாரிக்கப்படும் விபூதியானது மூலிகையால் பதப்படுத்தி வைத்து அளிக்கப்படுகிறது. அதனைத் தரிக்கும்போது உடலுக்குப் புத்துணர்ச்சியும் நோய் நொடிகள் தாக்கப்படாத அம்சமாகக் காணப்படுகிறது” எனத் தெரிவித்தார்.

இத்தனை சிறப்பம்சங்களை கொண்ட பாதாள செம்பு முருகனை நாமும் வழிபட்டு வாழ்க்கையில் அனைத்து நன்மைகளும் பெறுவோமாக.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US