விமோசனமே கிடைக்காத மூன்று பாவங்கள்

By Sakthi Raj Jul 28, 2024 05:30 AM GMT
Report

நாம் பிறந்து வாழும் உலகத்தில் பணம் சம்பாதிப்பதை தாண்டி நாம் உண்மையாக சம்பாதிப்பது பாவம் புண்ணியம் தான்.அப்படியாக புண்ணியம் சம்பாதிப்பவர்கள் தப்பித்து நல்ல மோட்சம் அடைந்து விடுவார்கள்.

ஆனால் பாவம் சம்பாதித்தவர்கள் நிச்சயம் கடவுளின் தண்டனையில் இருந்து தப்பிக்கவே முடியாது.அதிலும் ஒரு சில பாவங்களை செய்தால் அவர்களால் வாழ்க்கையில் எந்த ஒரு பரிகாரம் செய்தாலும் விமோசனம் என்பது இல்லை.அதை பற்றி பார்ப்போம்.

விமோசனமே கிடைக்காத மூன்று பாவங்கள் | Pavam Puniyam Kadavul Pariagaram

1. பெற்றோர்களை கைவிடுதல்

நாம் வளர்ந்து நமக்கு தனியே தன்னம்பிக்கையும் அறிவும் வந்துவிட்டது என்பதற்காக பெற்றவர்கள் அடுத்தவர்கள் ஆகிவிடமாட்டார்கள்.

அவர்களால் தான்,நாம் இன்று சுந்தந்திரமாகவும் தன்னம்பிக்கையாகவும் செயல்பட காரணம்.அவர்களை புறக்கணித்து ஒரு அடி எடுத்துவைத்தாலே அழியாத பாவம் நம்மை அடைகிறது.

ஆஞ்சநேயர் வழிபாட்டினால் கிடைக்கும் பலன்கள்

ஆஞ்சநேயர் வழிபாட்டினால் கிடைக்கும் பலன்கள்


அப்படியாக திருமணம் ஆனபிறகு,நன்கு சம்பாதித்த பிறகு வயதான காலத்தில் அவர்களை பராமரிக்காமல் போவது என்பது கடவுளின் மன்னிக்கமுடியாத பாவங்கள்.அந்த பாவத்தை செய்துவிட்டு அவர்கள் எத்தனை பரிகாரம் தேடினாலும் கடவுள் ஏற்றுக்கொள்ளமாட்டார்.

விமோசனமே கிடைக்காத மூன்று பாவங்கள் | Pavam Puniyam Kadavul Pariagaram

2. உயிரை வதைத்தல்

இறைவன் படைப்பில் அனைவரும் சமமே.அப்படியாக ஒரு உயிரை மதிக்காமல் நடப்பது,பிற உயிரை கொல்லுதல் போன்ற இயற்கைக்கு மீறிய செயலை செய்யும் பொழுது, அவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்படுகிறது.

பிரம்மஹத்தி தோஷம் நன்றி மறப்பவர்களுக்கும், பசுவை வதைப்பவர்களுக்கும், குரு துரோகம் செய்பவர்களுக்கு, அதர்ம வழியில் நடப்பது, சொத்தை அபகரிப்பது, பெற்ற தாயை அவமானப்படுத்துவது, உணவில்லாமல் பட்டினி கிடக்க செய்தது போன்ற செயல்களை செய்பவர்களுக்கு இந்த தோஷம் உண்டாகிறது.

விமோசனமே கிடைக்காத மூன்று பாவங்கள் | Pavam Puniyam Kadavul Pariagaram

3. வார்த்தைகளால் காயப்படுத்துதல்

சிலர் தனக்கு எல்லாம் தெரிந்தது போலும்,தன்னுடைய அந்தஸ்து கொஞ்சம் உயர்வடைந்த பிறகும் அவர்கள் பேச்சிலும்,நடவடிக்கையிலும் பல மாற்றங்கள் ஏற்படும்.பிற உயிர்களை சர்வ சாதாரணமாக மனம் புண் படும்படி வார்தைகளால் கொட்டி தீர்த்துவிடுவார்கள்.

அப்படியானவர்களுக்கு கடவுள் கண்டிப்பாக மறக்கமுடியாத தண்டனையும்,பாடமும் கற்றுக்கொடுப்பார்.உயிரை மதிக்க கற்றுக்கொள்ளவேண்டும்.பிற உயிரை அலட்சியமாக நடத்துவது அவமானப்படுத்துவது போன்ற செயல்களால் அவர்கள் வாழ்க்கையில் மிக துயரம் அனுபவித்து உணரப்போகிறார் என்று அர்த்தம்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.
+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US