இரட்டை முக பைரவர் மர்மங்கள் நிறைந்த சுகந்தவனேஸ்வரர் ஆலயம்
உலகில் எல்லாம் மர்மம் நிறைந்தவையாகத்தான் இருக்கிறது.அதிலும் ஆன்மீகத்தில் பல அதிசயங்கள் ஆச்சிரியங்கள் இருக்கிறது.
ஒவ்வொரு கோயில் பின்னாலும் ஒவ்வொரு வரலாறு அவை எல்லாம் மெய் சிலிர்க்க வைக்கக்கூடியதாகஇருக்கும்.
அப்படியாக சிவகங்கை மாவட்டம் பெரிச்சிகோவில் என்ற இடத்தில் உள்ள அருள்மிகு சுகந்தவனேஸ்வரர் கோவிலில் நடைபெறும் அற்புதங்கள் அனைவரையும் வியக்க வைக்க கூடியதாக இருக்கிறது.
இக்கோவிலானது சுமார் 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த மிகவும் சிறப்பு வாய்ந்த கோவிலாகும். இக்கோவிலின் மூலவரான சுகந்தவனேஸ்வரர் மிகவும் அழகாக காட்சியளிக்கிறார்.
இங்குள்ள பைரவர் எட்டு கைகளிலும் ஆயுதம் ஏந்தி, கபால மாலை அணிந்திருக்கிறார்.
இரட்டை முக பைரவர்
இக்கோவிலில் பைரவர் இரட்டை முக பைரவராக, மேற்கு நோக்கியவாறு மிகவும் கம்பீரமாக காட்சி தருகிறார்.
போகர் என்ற சித்தர், நவபாஷாணத்தில் உள்ள விஷத்தன்மையை நீக்கி பழனி முருகன் சிலையை உருவாக்கினார் என்ற வரலாறு உள்ளது. அதே போகர் தான், இந்த இரட்டை முக பைரவரையும், விஷத்தன்மையை நீக்காமல் நவபாஷாணத்தால் வடித்துள்ளார்.
இன்னொரு விஷேச செய்தி என்னவென்றால் பழனி முருகனின் சிலையை வடிவைமைப்பதற்கு முன்பே இந்த பைரவர் சிலை உருவாக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.
இக்கோவிலில் உள்ள பைரவருக்கு தீபாராதனை காட்டும்போது முன்புறம் பைரவர் போலவும், பின்புறம் பழனி முருகன் போலவும் காட்சியளிப்பதாக கூறுகிறார்கள்.
கலியுக அதிசயம்
இந்த பைரவரின் சிலை அதிக சக்தியுடைய நவபாஷாணத்தால் ஆனது, இதன் விஷத்தன்மையை தாங்கும் வலிமை மனிதர்களுக்கு இருக்காது என்பதால், பைரவருக்கு அணிவிக்கப்படும் வடை மாலை மற்றும் தீர்த்தம் ஆகியவற்றை பிரசாதமாகக் கொடுப்பதில்லை.
பைரவருக்கு சாற்றிய வடை மாலையை சன்னதிக்கு மேலே போட்டு விடுகிறார்கள். இத்தலத்தில் அதிசயமாக இதை பறவைகளும் சாப்பிடுவதில்லை என்று கூறப்படுகிறது.
பைரவருக்கு அபிஷேகம் செய்யப்படும் அபிஷேக தீர்த்தமானது பக்தர்கள் தொட முடியாதபடி, கோவிலுக்கு வெளியே விழுமாறு அமைக்கப்பட்டிருக்கிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |