பிறர் கொடுத்த சாபத்திலிருந்து எப்படி வெளிவருவது?
நாம் ஆதி காலத்தில் இருந்து இந்த "சாபம்" என்ற ஒரு வார்த்தை புராணங்கள் ஆன்மிகம் காவியங்களில் கேள்வி பட்டு இருப்போம்.அப்படியாக தெய்வங்கள் முதல் ரிஷிகள் முனிவர்கள் வரை பிறர் தீங்கு விளைவிக்க சாபம் கொடுத்து இருக்கிறார்கள்.
சாபம் பெற்றவர்கள் அதற்கு பரிகாரம் தேடி அதன் பலனையும் அடைந்து இருக்கிறார்கள்.அப்படியாக ஒருவரது சாபம் பல தலைமுறையை பாதிக்கும்.
சில பேருக்கு அந்த சாபம் ஆனது வாழ்க்கையில் தடங்கல்,ஜாதகத்தில் தோஷம் போன்றவற்றை கொடுக்கும்.அப்படியாக ஒருவருக்கு பிறர் சாபம் கொடுத்தால் என்ன ஆகும்?அவர்களை அதை பாதிக்குமா என்று பார்ப்போம்.
உலகத்தில் மோசமான செயல்ககளில் ஒன்று பிறரை மனம் வருந்த செயல் செய்வது.
அப்படியாக அப்படி செய்வதினால் அவர்கள் மனம் வருந்தி சமயங்களில் அவர்களையே அறியாமல் சாபம் கொடுத்து விடுவார்கள்.
அப்படியான சாபம் அவர்களை அவர்கள் வம்சத்தையே சீர் குழைத்து விடும்.அப்படி சாபம் ஏற்பட்டால் அவர்கள் சேதாரம் இல்லாத 8(ஓட்டை,பூச்சி அரிக்காத) முழு மாஇலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு தேங்காயை உடைத்து, துருவி, அந்த தேங்காய் துருவலில் கொஞ்சம் சர்க்கரையை சேர்த்து பிசைந்து, தேங்காய் சர்க்கரை சேர்த்த கலவையை தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் கட்டாயம், உங்கள் வீட்டு குலதெய்வத்தின் படம் இருக்கும்.
அந்த குலதெய்வத்தின் முன்பாக மாஇலைகளை அடுக்கி வைத்துவிட வேண்டும். ஒரு மாவிலை பக்கத்தில், இன்னொரு மாவிலையை வைத்து காம்பு பக்கம் இறைவனை பார்த்தவாறும் நுனி பக்கம் உங்களை பார்த்தவாறு இருக்கும்படி வரிசையாக அடுக்கி வைத்து கொள்ளவும்.
அந்த மாவிலைகளின் மேல், தேங்காய் துருவல் சர்க்கரை கலந்த கலவையை, ஒரு ஸ்பூன் அளவு வைக்க வேண்டும். இப்படி, தேங்காய் சர்க்கரை கலவையை, நைவேத்தியமாக மாவிலைகளின் மீது வைத்து குலதெய்வத்துக்கு படைத்து உங்களுக்கு இருக்கும் சாபம் நிவர்த்தி ஆக வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.
உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், இந்த பரிகாரத்தை யார் வேண்டும் என்றாலும் அவரவர் வீட்டிலேயே செய்யலாம். உங்கள் வாழ்க்கையில் இருக்கும் எப்படிப்பட்ட சாபமாக இருந்தாலும் அதற்கான விமோசனம் கிடைக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இலலை.
தேய்பிறை அஷ்டமி திதியன்று இந்த பரிகாரத்தை செய்ய ஆரம்பிக்க வேண்டும். தொடர்ந்து 8 தேய்பிறை அஷ்டமி திதிகள் இந்த பரிகாரத்தை செய்து வந்தால், உங்களுக்கு இருக்கக்கூடிய எப்படிப்பட்ட சாபமாக இருந்தாலும், அது கட்டாயம் நிவர்த்தி அடையும்.
முழுமையாக நிவர்த்தி அடையவில்லை என்றாலும், அந்த சாபத்தின் தாக்கமானது கட்டாயம் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |