இந்த தேதியில் பிறந்தவர்கள் மிகப் பெரிய கோடீஸ்வரர்களாக இருப்பார்களாம்
ஜோதிடத்தில் எண் கணிதம் என்பது மிக முக்கியமாக பார்க்கக்கூடிய ஒரு கணிப்பாகும். அப்படியாக ஒருவர் பிறந்த தேதியை வைத்து நாம் அவர்களுடைய வாழ்க்கை நிலை எப்படி இருக்கும்? அவர்களுடைய தொழில் மற்றும் பொருளாதாரம் எவ்வாறு அமையும் என்று நாம் தெரிந்து கொள்ள முடியும்.
அந்த வகையில் இயற்கையாகவே ஒரு சில எண்களில் பிறந்தவர்கள் மிகப் பெரிய செல்வந்தர்களாக ஆகக்கூடிய பாக்கியம் பெற்றிருப்பதாக சொல்கிறார்கள். அவர்கள் யார்? எந்த எண்ணில் பிறந்தவர்கள் என்று பார்ப்போம்.
எண் 4:
எண் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் மிக பெரிய உழைப்பாளிகளாக இருப்பார்கள். இவர்கள் எதையும் துணிச்சலோடு அணுகி வெற்றி காண வேண்டும் என்ற முனைப்பு இவர்களிடம் காணப்படும். மேலும் இவர்கள் தொழில் ரீதியாக ஒழுக்கத்தை கடைப்பிடித்து அவர்கள் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய உயரத்தை முன்னேற்றத்தை அடையக்கூடிய நபராக இருக்கிறார்கள். இவர்களுடைய தொழில் ஒழுக்கம் இவர்களுக்கு மிகப்பெரிய அளவில் பொருளாதாரத்தை பெற்றுக் கொடுக்கிறது.
எண் 9:
எண் 9, 18, 27, 9 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் மிகப்பெரிய படைப்பாற்றல் உடையவர்கள். இவர்களுடைய படைப்பாற்றல்களால் இவர்கள் பலவிதமான முயற்சிகள் செய்து அவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைகிறார்கள். இவர்கள் சமூக நீதி சிந்தனை உடையவர்கள். அதேபோல் கலைத்துறைகளில் இவர்கள் பெரும் அளவில் முன்னேற்றமும் பெரும் அளவில் சாதனைகளையும் புரியக்கூடியவர்களாக இருக்கிறார்கள். கலை துறையில் இவர்கள் புகழ் பெற்று அதன் வழியாக பொருளாதாரத்தை பெறுவார்கள்.
எண் 3:
எண் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் பேச்சாற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள். இவர்களுடைய பேச்சுத் திறமையால் இவர்கள் சமுதாயத்தில் மிக உயர்ந்த இடத்தை பெற்று இவர்களுக்கான அங்கீகாரத்தை தேடி கொள்வார்கள். அதே சமயம் இவர்களுடைய பேச்சுத் திறமையால் இவர்கள் தொழில் ரீதியாக மிகப் பெரிய வளர்ச்சியை அடைந்து அந்த வளர்ச்சியின் வழியாக நிறைய பொருளாதாரத்தை பெறக்கூடியவர்கள். இவர்கள் சிக்கனமாகவும் இருப்பார்கள். அதே சமயம் பொருளாதாரத்தை எவ்வாறு நாம் உயர்த்த வேண்டும் என்று எண்ணம் இவர்களிடத்தில் நாம் அதிகம் காண முடியும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







