இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பயங்கர கில்லாடிகளாக இருப்பார்களாம்
ஜோதிடத்தில் எண் கணிதம் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. மேலும், எண் கணிதம் கொண்டு வாழ்க்கையை கணித்து விடலாம். அதாவது அந்த நபர் எவ்வாறான தொழிலை தேர்ந்தெடுப்பார்கள், வாழ்க்கை துணை எவ்வாறு இருப்பார்கள், அந்த நபரின் உடைய குண நலன்கள் எப்படி இருக்கும் என்று என் கணிதம் வழியாக நாம் சில விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும்.
அந்த வகையில் குறிப்பிட்ட சில மாதத்தில் பிறந்தவர்கள் மிகவும் புத்திசாலியாக இருப்பார்களாம். இவர்கள் எதையும் ஒரு முனைப்போடு செய்து மற்றவர்களை திரும்பிப் பார்க்க வைக்கக்கூடிய ஒரு ஆற்றல் பெற்றவர்களாக இருப்பார்கள். அவர்கள் யார் என்று பார்ப்போம்.
பிப்ரவரி:
பிப்ரவரி மாதத்தில் பிறந்தவர்கள் எல்லோரிடத்திலும் அன்பாக பழகுவார்கள். இவர்களிடம் அதிகப்படியான திறமைகள் இருக்கும். ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்றால் பல முறை யோசித்து பிறகே அந்த விஷயத்தில் இறங்கி செயல்படுவார்கள், கலைதுறையில் இவர்கள் மிகச் சிறந்த சாதனையாளர்களாக இருப்பார்கள். இவர்களின் பேச்சாற்றல் அனைவரையும் எளிதாக கவரக்கூடிய வகையில் இருக்கும்.
மே:
மே மாதத்தில் பிறந்தவர்கள் எதையும் உணர்ச்சி ரீதியாக கையாளக் கூடியவர்கள். இவர்கள் பிறருடைய உணர்வுக்கு அதிக அளவில் மதிப்பளிப்பார்கள். இவர்கள் செய்யும் செயல்களில் ஒரு மென்மை இருக்கும். இவர்கள் அமைதியாக இருப்பது போல் இருக்கும் ஆனால் அனைத்தையும் நன்றாக கவனித்து தெளிவான பதிலை கொடுக்கக் கூடியவர்கள். இவர்களைப் பார்த்து இவர்களின் திறமையை கண்டு பொறாமை கொள்வார்கள்.
செப்டம்பர்:
செப்டம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் மிகவும் சிறந்த புத்திசாலிகள். இவர்கள் ஒரு விஷயத்தை அணுகும் விதமே அனைவரையும் வியக்கக்கூடிய ஒரு அமைப்பாக இருக்கும். தன்னுடைய புத்தி கூர்மையால் இவர்கள் பெரிய அளவில் வாழ்க்கையில் சாதனை செய்வார்கள். அதாவது வேலை ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் முன்னேற்றத்திற்கு இவர்களிடம் ஆலோசனை பெற்று செய்யலாம்.
டிசம்பர்:
டிசம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் அதி புத்திசாலியாக இருப்பார்கள். இவர்கள் ஆளுமை திறனை பார்த்து பலரும் வியந்து போகும் அளவில் இருக்கும். இவர்களுடைய திறமை இவர்களுக்கு ஒரு மிகப்பெரிய சக்தியாக இருக்கும். இவர்கள் யோசிப்பதை யாராலும் விமர்சனம் செய்ய முடியாத அளவு ஒரு நியாயமானதாக அமைகிறது. இவர்களை புரிந்து கொள்வது சற்று கடினமான விஷயம் தான்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







