இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கையில் அடிக்கடி பிரச்சினைகள் வருமாம்
ஜோதிட ரீதியாக நியூமராலஜியும் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில், ஒரு சில குறிப்பிட்ட தேதியில் நம்பரிலும் பிறந்தவர்களுக்கு வாழ்க்கையில் தொடர்ந்து பிரச்சினைகள் வரும் என்று சொல்லப்படுகிறது.
அதாவது அவர்களுக்கு உடல் காயம், விரல் மற்றும் கால் விரல்களில் காயங்கள் போன்றவை அதிகம் தொடர்ந்து ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. அதை பற்றி பார்ப்போம்.
நம்முடைய விரல்களில் அடிபடுவது என்பதை நமக்கு வரும் விபத்தாக மட்டும் பார்க்க கூடாது. சுண்டு விரலில் அடிபட்டால் அது அதிர்ஷ்டம் நம்மை விட்டு விலகுவதற்கான அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது.
கட்டை விரலில் அடிபடுகின்ற பொழுது அது இறை சக்தி அல்லது தெய்வீக அருள் குறைவதாக கருதப்படுகிறது.
அதேபோல், கால் விரல்களில் ஏற்படக்கூடிய காயங்கள் குறிப்பாக வாழ்க்கை துணையுடன் இருக்கக்கூடிய சிக்கல்கள் தொடர்பான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.
பிறந்த தேதியில் இரண்டு அல்லது ஒன்பது ஆகிய எண்கள் இருந்தால் இவர்கள் அடிக்கடி விபத்துகளை சந்திக்க கூடிய நிலை வரலாம். அதேபோல், மூன்று மற்றும் ஏழு ஆகிய எண்களும் விபத்துகளுடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது.
இந்த தகவல்கள் நிச்சயம் ஒருவரை அச்சம் உருவாக்குவதற்காக அல்ல.
ஆனால், நாம் அன்றாட வாழ்க்கையில் எந்த எண்ணில் பிறந்திருந்தாலும் நிச்சயமாக அவர்கள் எல்லா விஷயங்களிலும் கவனமாக இருக்க வேண்டும் என்பதை பற்றின ஒரு விழிப்புணர்வாகவும் எடுத்துக் கொள்ளலாம். மேலும், எண் தொடர்பான பல்வேறு விஷயங்களை நாம் இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |