பிறரிடம் சண்டை போடுவது என்றால் இந்த ராசிகளுக்கு மிகவும் பிடிக்குமாம்

By Sakthi Raj Mar 07, 2026 01:00 PM GMT
Report

 நாம் பொதுவாக ஒரு சிலர் சாதாரணமாக சொல்லக்கூடியதை கூட அவர்கள் மிகவும் பெரிது படுத்தி ஒரு சண்டையில் கொண்டு நிறுத்தி விடுவார்கள்.

இதற்கு அவர்களுடைய பிறவி குணம் ஒரு காரணமாக இருந்தாலும், அந்த பிறவி குணம் ஆனது அவர்களுடைய ராசி அமைப்பில் இருந்து வருகிறது என்பதை நாம் ஜோதிட ரீதியாக பார்க்கலாம். அப்படியாக ஒருவரிடம் சண்டை போடுவதில் அதிக ஆர்வம் காட்டக்கூடிய ராசிகள் யார் என்று பார்ப்போம்.

பிறரிடம் சண்டை போடுவது என்றால் இந்த ராசிகளுக்கு மிகவும் பிடிக்குமாம் | People Born This Zodiac Always Fight With Others

மந்திரங்களை தவறாக உச்சரித்தால் என்ன நடக்கும் தெரியுமா?

மந்திரங்களை தவறாக உச்சரித்தால் என்ன நடக்கும் தெரியுமா?

மேஷம்:

மேஷ ராசியினர் பார்ப்பதற்கு அமைதியாக இருந்தாலும் அதிக அளவில் கோபப்பட கூடியவர்கள். யாரேனும் ஒருவர் இவர்களை காயப்படுத்தி விட்டார்கள் என்றால் மீண்டும் அந்த நபரை காயப்படுத்தும் வரை இவர்களால் நிம்மதியாக இருக்க முடியாது. பல நேரங்களில் மன்னிக்க வேண்டும் என்று இவர்கள் நினைத்தாலும் இவர்களுடைய கோபமானது அதை தடுத்து விடுகிறது.

சிம்மம்:

சிம்ம ராசியினர் மிகச் சிறந்த ஆளுமை பண்பு கொண்டவர்கள். சிம்ம ராசியினரிடம் நாம் அவ்வளவு எளிதாக பேசி வெற்றி பெற்று விட முடியாது. மேலும் இவர்களிடம் பொழுது போக்காக செய்யக்கூடிய சில விஷயங்கள் கூட அவர்கள் சில நேரம் மிகப்பெரிய அளவில் சண்டையாக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இவர்களிடம் நாம் எப்பொழுதும் கவனமாகவே இருக்க வேண்டிய நிலையில் உள்ளது.

2026: சனிப்பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு தான் ஜாக்பாட்.. உங்கள் ராசி உள்ளதா?

2026: சனிப்பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு தான் ஜாக்பாட்.. உங்கள் ராசி உள்ளதா?

விருச்சிகம்:

விருச்சிக ராசியினர் எப்பொழுதும் ஒருவர் பேசுவதை தவறாக புரிந்து கொள்ளக் கூடியவர்களாக இருக்கிறார்கள். சில நேரங்களில் ஒரு சிலர் சொல்லக்கூடிய நன்மைகள் கூட இவர்கள் தவறாக புரிந்து கொண்டு அந்த நபரிடம் மிகப்பெரிய அளவில் சண்டையிடக்கூடியவர்களாக இருக்கிறார்கள். நாம் எப்பொழுதும் மிகுந்த கவனத்துடன் பேச வேண்டிய நிலை உள்ளது. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US