ஒருவரிடம் பழகும் பொழுது அதிக எதிர்பார்ப்புகள் கொண்டு பழகக்கூடிய ராசிகள் யார் தெரியுமா?

By Sakthi Raj Jun 03, 2026 01:00 PM GMT
Report

  ஜோதிட ரீதியாக ஒவ்வொரு ராசியினருக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருக்கிறது. அது அவர்களுடைய மன நிலையில் நாம் காணலாம். இருப்பினும் மற்ற கிரகங்களின் அமைப்பைக் பொருத்தும் அந்த மனநிலையில் சில நேரங்களில் ஏற்ற இறக்கம் இருக்கும்.

அப்படியாக, ஒரு சிலர் எப்பொழுதும் நிறைய எதிர்பார்ப்புகள் கொண்டு இருப்பார்கள். அவர்களுடைய எதிர்பார்ப்பு நாம் தவறு என்று சொல்ல முடியாது. நம் மீது இருக்கக்கூடிய அன்பினாலும், உரிமையினாலும் அவர்கள் அன்பான சில பரிசு பொருட்களை எதிர்பார்க்கிறார்கள். அப்படியாக எந்த ராசியில் பிறந்தவர்கள் அதிக எதிர்பாப்பு கொண்டவர்கள் என்று பார்ப்போம்.

ஆன்மீகம்: வீடுகளில் பூஜை செய்யும் பொழுது இந்த தவறை செய்து விடாதீர்கள்

ஆன்மீகம்: வீடுகளில் பூஜை செய்யும் பொழுது இந்த தவறை செய்து விடாதீர்கள்

ஆன்மீகம்: வீடுகளில் பூஜை செய்யும் பொழுது இந்த தவறை செய்து விடாதீர்கள்

ஆன்மீகம்: வீடுகளில் பூஜை செய்யும் பொழுது இந்த தவறை செய்து விடாதீர்கள்

ரிஷபம்:

ரிஷப ராசியை பொறுத்தவரை இவர்களுக்கு நட்பு வட்டாரம் மிகவும் குறைவு. ஆதலால், இவர்கள் நண்பர்களிடத்தில் அதிக அளவில் அன்பும் நேரமும் செலவிடுகிறார்கள்.

அதை போல் நண்பர்கள் இவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து முக்கியமான நாட்களில் பரிசுப் பொருட்கள் கொடுத்து அவர்களை மகிழ்விக்க வேண்டும் என்று ஒரு ஆசையை இவர்கள் மனதில் வைத்திருக்கிறார்கள்.

மிதுனம்:

மிதுன ராசிக்கு ராசியினர் எல்லோரிடமும் சந்தோஷமாக பழகினாலும் இவர்களுக்கு நெருங்கிய நண்பர்கள் என்பது குறைவு. அது மட்டுமல்லாமல் இவர்களுக்கு பிடித்தவர்களுக்காக இவர்கள் எதையும் செய்ய தயங்கமாட்டார்கள்.

அந்த நபர்கள் எதிர்பார்த்ததை விடவும் இவர்கள் அதிகம் செய்யக் கூடியவர்களாக இருந்தாலும் பதிலுக்கு இவர்களும் அந்த நண்பர்கள் தங்களுக்கு ஏதேனும் செய்ய மாட்டார்களா என்று ஏக்கம் கொண்டவர்களாக காணப்படுகிறார்கள்.

மீனம்:

மீன ராசியில் பிறந்தவர்கள் யாரிடம் பழகினாலும் உண்மையாக பழக கூடியவர்கள். அவர்களுக்காக எதையும் செய்ய துணி பவர்கள். பல நேரங்களில் மீன ராசியினர்தான் ஒரு சிலருக்கு முன் வந்து அவர்களுக்காக பரிசுப் பொருட்களோ அல்லது அவர்களுக்கு தேவையானது வாங்கி கொடுக்க கூடியவர்களாகவும் இருக்கிறார்கள்.

அதனால் இவர்கள் சில சமயங்களில் நமக்கும் நம்மிடம் பழகக் கூடியவர்கள் ஏதேனும் மகிழ்ச்சி தரக்கூடிய விஷயங்களை பரிசளிக்க மாட்டார்களா என்று ஒரு ஏக்கம் கொள்கிறார்கள். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US