இந்த ஜாதக அமைப்பு கொண்டவர்களுக்கு தங்கம் குவிந்தே கொண்டே இருக்குமாம்

By Sakthi Raj Apr 07, 2026 01:00 PM GMT
Report

பொதுவாகவே நம்முடைய வாழ்க்கையில் தேவைக்காக சில விஷயங்கள் கிடைத்தாலும் இன்னும் இன்னும் என்று ஆசைகள் உருவாகுவது இயல்பான ஒன்றாக உள்ளது. அதில் தங்களுடைய ஆசையை நிறைவேற்றிக் கொள்வதற்கு ஒரு சிலர் மட்டுமே கடின உழைப்புகளை போடுகிறார்கள்.

அவ்வாறு கடின உழைப்புகளை போட்டாலும் ஜாதக ரீதியாக அவர்களுக்கு நினைத்ததை அடையக்கூடிய அமைப்பு இருந்து விட்டால் நிச்சயம் நினைத்ததை விட பல மடங்கு அவர்கள் பெற்று விடுவார்கள்.

இந்த ஜாதக அமைப்பு கொண்டவர்களுக்கு தங்கம் குவிந்தே கொண்டே இருக்குமாம் | People With This Kind Of Horoscope Earn More Gold 

பணவசியம் உண்டாக்கும் செம்பருத்தி பூ ரகசியம்.. ஒரு வாரத்தில் மாற்றத்தை காணலாம்

பணவசியம் உண்டாக்கும் செம்பருத்தி பூ ரகசியம்.. ஒரு வாரத்தில் மாற்றத்தை காணலாம்

அப்படியாக, ஜோதிட ரீதியாக எந்த அமைப்பு கொண்டவர்களுக்கு அதிக அளவில் தங்கம் சேரக்கூடிய யோகம் உண்டாகும் என்பதை பற்றி பார்ப்போம். நவ கிரகங்களில் குரு பகவான் தான் சுப கிரகமாக இருக்கிறார்.

மேலும், குருவின் பார்வை இருந்தால் தான் ஒரு நபருக்கு நல்ல கல்வி, திருமணம், வசதி வாய்ப்பு சமுதாயத்தல் பெயர் புகழ் போன்றவை கிடைக்கும். அதேபோல் கிரகங்களில் தலைமையாக விளங்கக்கூடிய சூரிய பகவான் ஒருவர் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்க வேண்டும்.

சூரிய பகவான் தான் அந்த ஜாதகருக்கு முக்கிய பொறுப்புகளையும் அவர்கள் தந்தை உடனான பந்தத்தையும் அரசு அதிகாரம் போன்றவற்றை குறிக்கக் கூடியதாக இருக்கிறது.

இந்த ஜாதக அமைப்பு கொண்டவர்களுக்கு தங்கம் குவிந்தே கொண்டே இருக்குமாம் | People With This Kind Of Horoscope Earn More Gold

2026 ஏப்ரல் பலன்: மீன ராசியினர் இந்த விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்கவேண்டுமாம்

2026 ஏப்ரல் பலன்: மீன ராசியினர் இந்த விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்கவேண்டுமாம்

அந்த வகையில் ஒருவருடைய ஜாதகத்தில் குரு பகவான் வீட்டில் சூரிய பகவான் இருந்தாலும் அல்லது சூரியன் வீட்டில் குரு இருப்பதும் அல்லது சுக்கிரன் குரு சேர்ந்து இருந்தாலும் சுக்கிரனும் குருவும் பரிவர்த்தனை அல்லது குருவும் சூரியனும் பரிவர்த்தனை பெற்றிருந்தாலும் இந்த ஜாதகருக்கு அதிக அளவில் தங்க நகையும் பணமும் சேர்ந்து கொண்டே இருக்கும்.

இவர்கள் சம்பாதிக்கின்ற பணத்தை தங்கத்தல் முதலீடு செய்யக்கூடிய அமைப்பை பெற்றிருப்பார்கள். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US