முருகனை தரிசிக்கும் நேரமும் அதன் பலன்களும்
இந்து மதத்தில் தமிழ்க்கடவுள் என்று வழிபடும் முருகன் குன்று இருக்கும் இடமெல்லாம் இருப்பான் என்று சொல்லப்படுகிறது.
முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்யும் பொருட்கள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் உண்டு.
நமக்கு என்ன பிரச்சனை அல்லது தேவை உள்ளதோ அதற்கு ஏற்ற பொருளால் அபிஷேகம் செய்து, வழிபட்டால் துன்பங்கள் தீரும்.
அதே போல் முருகப் பெருமானை தரிசிக்கும் நேரங்களுக்கு ஏற்ப பலன்களும் மாறுபடும்.
முருகனை தரிசிக்கும் நேரமும், பலன்களும்
விஸ்வரூப தரிசனம்- எப்படிப்பட்ட கஷ்டத்தையும் தீர்க்கக் கூடியது.
முதல் காலத்தில் செய்யக் கூடிய அலங்காரம்- நல்ல இடத்தில் வேலை கிடைக்கும்.
உச்சி கால பூஜை- குழந்தை வரம் கிடைக்கும்.
சாயரட்சை பூஜை- குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
பள்ளியறை பூஜை- தம்பதி ஒற்றுமை, பிரிந்தவர்கள் ஒன்று சேர, மன நிம்மதி கிடைக்க இந்த தரிசனம் ஏற்றது.
அர்த்த ஜாம பூஜை- வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய, நினைத்த காரியங்களை சாதிக்க, நிறைவான வாழ்க்கை பெற முடியும்.
மேலும், முருகனுக்கு வெள்ளி கவசம் சாற்றி இருக்கும் போது தரிசனம் செய்தால் சுக்கிரனின் அருள் கிடைத்து செல்வங்கள் சேரும். பணக் கஷ்டங்கள் உள்ளிட்ட கஷ்டங்கள் தீரும்.
முருகப் பெருமானுக்கு தங்க கவசம் அல்லது தங்க அங்கி சாற்றப்பட்டிருக்கும் போது தரிசனம் செய்தால் குரு பகவானின் அருள் கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |