பொருளாதார சிக்கல் விலக எமகண்டத்தில் செய்யவேண்டிய வழிபாடு
பெருமாள் வழிபாடு எப்பொழுதும் மிக சிறந்த பலனை கொடுக்கும்.ஒருவர் அவர் செய்த பாவம் விலக கட்டாயம் அவர்கள் சரண் அடையவேண்டியது பெருமாளைத்தான்.மேலும், வளர்பிறை ஏகாதசியில், பெருமாளை வழிபாடு செய்தால் புண்ணியம் கிடைக்கும் என்று சொல்லுவார்கள்.
அதோடு நம்முடைய கர்ம வினைகள் விலக மாதம் தோறும் வரக்கூடிய வளர்பிறை ஏகாதசி, தேய்பிறை ஏகாதசி திதி அன்று விரதம் இருந்து பெருமாளை வழிபடுவது சிறந்த பலனை கொடுக்கும். அதே போல் சிலருக்கு திடீர் பண கஷ்டங்கள் உருவாகி இருக்கும்.
அவர்கள் கட்டாயம் பெருமாளை சரண் அடைய வாழ்க்கையில் எத்தனை பெரிய கஷ்டம் வந்தாலும் அதை எளிதாக கடக்க பெருமாள் அருள் புரிவார்.
அதன் அடிப்படையில் எமகண்ட நேரத்தில் வீட்டில் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து விட்டு இரண்டு துளசி இலையோ அல்லது நெல்லிக்காயோ வைத்து அவருடைய இந்த பாடலை பாட நிச்சயம் நம் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை காணலாம்.
அதே போல் வாரம் தோறும் வரும் எமகண்ட நேரத்தில் இந்த வழிபாட்டை செய்யலாம்.இவ்வாறு செய்ய வீட்டில் உள்ள பண கஷ்டம் விலகுவதோடு,எம பயம் நீங்கும்.
பெருமாள் பாடல் வரிகள்
கோவிந்தா கோவிந்தா
வேங்கடரமணா கோவிந்தா !
கோவிந்தா கோவிந்தா
வேங்கடரமணா கோவிந்தா!
ஸ்ரீ ஸ்ரீனிவாசா கோவிந்தா
ஸ்ரீ வெங்கடேசா கோவிந்தா !
பக்தவத்சலா கோவிந்தா
பகவதப்ரியா கோவிந்தா !
எமகண்ட நேரத்தில் இந்த பாடல் பாடுவதால் நம்முடைய ஆழ்மனதில் உள்ள பயம் விலகும்.அதோடு நம் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல் விலகி.எதையும் துணிந்து போராடும் ஆற்றல் பிறக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |