பெருமாளை எப்படி வணங்க வேண்டும்?

By Sakthi Raj Apr 22, 2024 11:59 AM GMT
Report

ஒருவர் பெருமாளை வணங்க தொடங்கிவிட்டால் அவர் வாழ்க்கையில் என்றுமே ஒளிமையம் தான்.

நாம் ரெங்கனை வணங்க அவர் நம்முடன் ஐக்கியமாகி வாழ்க்கை எத்தனை அழகு அதில் இன்பம் வந்தால் துன்பம் வரும் அதன் பின் அங்கு ரெங்கன் வருவேன் என்று ஆசையாக வாழ கற்று கொடுப்பார்.

மேலும் உலகில் மிக சிறந்த தர்மத்தின் பக்கம் நாம் சாய்ந்து நிற்க ஆசை தூண்டுவார்,தர்மமே ஒருவர் சிறப்பான வாழ்க்கை வாழ அவர் தேர்தெடுக்கும் சிறந்த செல்வம் என போதிப்பார்.

பெருமாளை எப்படி வணங்க வேண்டும்? | Peruml Renganathan Aandal Vazhipadu

உண்மையில் ஆண்டாள் அம்மாவையும் பெருமாளையும் எவர் ஒருவர் வாழ்க்கையில் வணங்க தொடங்குகிறார்களோ அவர்கள் முகமும் வாழ்க்கையும் பொலிவடைவதை பார்க்க முடியும்.

இருப்பினும்,கண்ணன் விளையாட்டு பிள்ளை அல்லவா சமயங்களில் பக்தர்களுடன் சிறு சிறு விளையாட்டுகளில் ஈடுபட்டு, அவன் நொடிப்பொழுதும் நம்முடன் மட்டுமே இருக்கின்றான் எங்கும் போகவில்லை என்ற அற்புதத்தை உணரவைப்பான்.

பெருமாளை எப்படி வணங்க வேண்டும்? | Peruml Renganathan Aandal Vazhipadu

 நாம் பெருமாளை எப்படி வணக்க வேண்டும் என்றால்?

ரெங்கநாத என் மனதில் நீ குடிகொண்டதே யான் செய்த பெரும் புண்ணியம்.இன்னும் நின் அருள் பெற்று பல புண்ணியம் செய்து உன் பரிபூர்ண அருளை ஏழு பிறவிக்கும் கிடைக்குமாறு செய்ய வேண்டும்.அதுவே இந்த பக்தனின் வேண்டுதல் என்று அவர் முன் உருக அரங்கநாதனை உணர முடியும்.

பெருமாளை எப்படி வணங்க வேண்டும்? | Peruml Renganathan Aandal Vazhipadu

ஆக ,துன்பம் வரும் வேளையில் பெருமாளே!!என்று மனம் தளராமல்,பொறுமையாக காத்திருக்க தக்க சமயத்தில் அங்கு கருட வாகனத்தில் வந்து தன் பக்தர்களின் இன்னல்களை தீர்ப்பார் அரங்கநாதன்.ஓம் நமோ நாராயணாய !!

ராமாயணம் நமக்கு உணர்த்துவது யாவை

ராமாயணம் நமக்கு உணர்த்துவது யாவை


ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US