பெருமாள் கோயிலில் மயான கொள்ளை நிகழ்வு

By Sakthi Raj Mar 04, 2025 01:00 PM GMT
Report

பொதுவாக மயான கொள்ளை நிகழ்வானது உக்கிரமனான அம்மன் கோயில்களில் நடைபெறும்.ஆனால் பெருமாள் கோயிலில் இந்த மயான கொள்ளை நிகழ்வு நடந்திருக்கிறது.அதை பற்றி பார்ப்போம்.

புதுச்சேரி அடுத்த பூஞ்சோலை புது குப்பம் கிராமத்தில்அருள்மிகு கலியபெருமாள் ஆலயத்தில் எழுந்தருளி உள்ள அருள்மிகு கோவிந்தன் ஆண்டவன் அல்லி முத்து மாரியம்மன் ஆலயம் இருக்கிறது.இக்கோயிலில் மகாசிவராத்திரி மற்றும் மாசி மாத அமாவாசையை விழா வெகு விமர்சையாக நடைபெறும்.

பெருமாள் கோயிலில் மயான கொள்ளை நிகழ்வு | Pondicherry Perumal Temple Mayana Kollai Vizha

அந்த வகையில் 66ஆம் ஆண்டு கடந்த 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய மயான கொள்ளை நடைபெற்றது.அதில் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் மற்றும் கும்பம் கொட்டுதல் நிகழ்வு நடந்தது.அதனை தொடர்ந்து அங்காளம்மன்,காளி உள்ளிட்ட பல்வேறு சுவாமி வேடங்கள் அணிந்தவர்கள் வீதி உலா வர கோவிலில் மயான கொள்ளை நடைபெற்றது.

கலியுகம் எப்பொழுது முடிவிற்கு வரும்?

கலியுகம் எப்பொழுது முடிவிற்கு வரும்?

இதில் நாணயங்கள், நவதானியங்கள், காய்கறிகள் பழங்கள் மற்றும் பல்வேறு உணவுப் பொருட்களை சூறைவிட்டு அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தினார்கள்.

விழாவில் சூறை விட்ட பொருட்களை ஏராளமான பக்தர்கள் போட்டி போட்டுக் கொண்டு எடுத்துச் சொல்வார்கள்.இவ்வாறாக பெருமாள் கோயிலில் நடைபெற்ற மயான கொள்ளை நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் திரண்டனர் 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US