பொங்கல் 2025:இன்றைய சிறப்பு ராசி பலன்(14.01.2025)

Report

மேஷம்:

இன்று குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவு செய்வீர்கள்.கடவுள் வழிபாட்டால் மனதில் சந்தோசம் உண்டாகும்.தொழில் வளர்ச்சியை பற்றி நண்பர்களுடன் ஆலோசனை செய்வீர்கள்.

ரிஷபம்:

இனி வரும் எதிர்ப்புகளை தைரியமாக எதிர்கொள்வீர்கள்.மனதில் உண்டான சங்கடங்கள் படிப்படியாக குறையும்.கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.குடும்பத்துடன் சுற்றுலா செல்ல வாய்ப்புகள் உள்ளது.

மிதுனம்:

செய்த தவறை எண்ணி மனம் வருந்துவீர்கள்.குடும்பத்துடன் கவனமாக பேசவேண்டும்.வியாபாரம் முன்னேற்றம் அடையும்.பிறரிடம் தேவை இல்லாத விஷயங்களை பகிர்ந்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.

கடகம்:

நீண்டநாட்களாக இழுபறியாக இருந்த வேலையை முடிப்பீர். உங்கள் செல்வாக்கு வெளிப்படும். சிறு வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். உதவி என்று கேட்போருக்கு உதவி செய்வீர்.

சிம்மம்:

உங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும்.நேற்று வரை வியாபாரத்தில் இருந்த தடைகள் படிப்படியாக குறையும்.நீண்ட நாள் கைக்கு வராமல் இருந்த பணம் வரும்.கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

கன்னி:

திட்டமிட்டிருந்த வேலைகளை முடிப்பீர். கேட்ட இடத்தில் இருந்து பணம்வரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.துணிச்சலுடன் செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

துலாம்:

வேலைசெய்பவருக்கு எதிர்பார்த்த தகவல் கிடைக்கும்.சில நெருக்கடிகளை சந்தித்தாலும் சமாளிப்பீர்கள்.இறைவழிபாடு நன்மை தரும்.இன்று ஒரு புதிய முயற்சிகளையும் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.

சீன அரசனின் உடலில் கூடுவிட்டு கூடுபாய்ந்த போகர் சித்தர்

சீன அரசனின் உடலில் கூடுவிட்டு கூடுபாய்ந்த போகர் சித்தர்

விருச்சிகம்:

வழிபாட்டில் பங்கேற்பீர். தந்தை வழி உறவுகளால் உங்கள் வேலை நடந்தேறும்.பிறரை அனுசரித்துச்சென்று வேலைகளை முடித்துக்கொள்வீர். நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்.

தனுசு:

இன்று எதிலும் விழிப்புடன் செயல்படவேண்டும்.உறவினர்கள் மத்தியில் கவனமாக இருக்கவேண்டும்.வியாபாரத்தை பற்றி தீவிரமாக யோசிப்பதை தவிர்க்கவும்.

மகரம்:

சிந்தித்து செயல்படுவதால் சிரமங்களைத் தவிர்க்கலாம். பெரியோரை சந்தித்து ஆசி வாங்குவீர்கள்.வரவால் வளம் காண்பீர். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும்.மறைமுக தொல்லைகள் விலகும்.

கும்பம்:

இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். வரவேண்டிய பணம் வரும். நினைத்ததை சாதிப்பீர்.தொழில் போட்டியாளர் விலகிச் செல்வர். உங்கள் செல்வாக்கு உயரும்.

மீனம்:

குடும்பத்துடன் சந்தோஷமான நேரத்தை செலவிடுவீர்கள்.உங்கள் மனதில் சிறு சிறு சங்கடம் தோன்றும்.மதியம் மேல் சற்று கவனமாக இருக்கவேண்டும்.நினைப்பதை நடத்தி முடிப்பீர்கள்.       

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

 

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US