புத்தாண்டில் பொங்கு சனி - 5 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை
சனி பகவான், 2026ம் ஆண்டில் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு வாரி வழங்கப்போகிறார். சனி பகவான் தனது சொந்த வீடான கும்ப ராசியில் சஞ்சரிப்பதும், அதன்பின் நிகழப்போகும் பெயர்ச்சிகளும் மேஷம், ரிஷபம், மிதுனம், சிம்மம் மற்றும் கும்பம் ஆகிய ஐந்து ராசிகளுக்கு எதிர்பாராத பொருளாதார புரட்சியை ஏற்படுத்தப் போகிறது.

மேஷம்
தொழிலில் முதலீடு செய்தவர்களுக்கு இரட்டிப்பு லாபமும், புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்குப் பெரிய அளவிலான நிதி உதவியும் கிடைக்கும். குறிப்பாக, அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு.
ரிஷபம்
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் பெரிய பதவிகளும், சம்பள உயர்வும் தேடி வரும். தொழிலில் நிலவி வந்த மந்த நிலை மாறி, புதிய ஆர்டர்கள் குவியும். சமுதாயத்தில் அந்தஸ்தும், கௌரவமும் உயரும்.
மிதுனம்
பூர்வீக சொத்துக்கள் மூலம் திடீர் பணவரவு உண்டாகும். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் கிடைப்பதோடு, வெளிநாடு சென்று பொருள் ஈட்டும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.
சிம்மம்
கூட்டுத் தொழில் செய்பவர்களுக்குப் பல மடங்கு லாபம் கிடைக்கும். பழைய கடன்கள் அனைத்தும் வசூலாகி, வங்கி இருப்பு உயரும். தொழிலதிபராக உருவெடுக்கலாம்.
கும்பம்
வீடு, நிலம், வாகன சேர்க்கை எனப் பொருளாதார ரீதியாகப் உச்சத்தைத் தொடும் வாய்ப்பு இவர்களுக்கு அதிகம். குறிப்பாக, இரும்பு, எண்ணெய், கட்டுமானத் துறையில் இருப்பவர்களுக்குப் பெரும் செல்வம் வந்து சேரும்.