தப்பி தவறியும் இதை வைத்து பூஜை செய்து விடகூடாது

By Sakthi Raj Apr 15, 2024 06:23 AM GMT
Report

நாம் தினமும் வீட்டில் இறைவனை நினைத்து பூஜை செய்வதுண்டு.அப்படியாக சில நேரம் நமக்கே தெரியமால் சில தவறுகள் செய்து விடுகின்றோம் .அப்படி இருக்க நாம் பூஜை செய்யும் பொழுது என்ன விஷயங்கள் எல்லாம் நினைவில் கொண்டு சரியான முறையில் பூஜை செய்யவேண்டும் மற்றும் எதையெல்லம் தவிர்க்க வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.

வீட்டில் என்ன விஷேசம் என்றாலும் பூஜை அறையில் கண்டிப்பாக வெற்றிலை பழம் பாக்கு வாங்கி வைப்பதுண்டு.அப்படி வைக்கும் பொழுது வெற்றிலைக்கு நுணியும், வாழைப்பழத்திற்கு காம்பும் அவசியம் இருக்க வேண்டும்.

தப்பி தவறியும் இதை வைத்து பூஜை செய்து விடகூடாது | Poojai Seiyavendiyavai Seiyakudathavai Parigaram

வெற்றிலைபாக்கில் நுண்ணாம்பு இருக்கக் கூடாது. மேலும் நாம் இறைவனுக்கு அவல்பொறி, கடலை மற்றும் கல்கண்டு நிவேதனமாகப் படைக்கலாம். பச்சரிசியில் சாதம் செய்து தான் கடவுளுக்குப் படைக்க வேண்டும்.

மேலும் பழ வைகைகள் என்று பார்த்தால் நாகப்பழம், மாதுளை, கொய்யா, வாழைப்பழம், நெல்லி, இளந்தை, விளாம்பழம், புளியம்பழம், மாம்பழம் ஆகிய பழங்கள் பூஜைக்கு ஏற்றவையாகும். வாழையில் நாட்டுப்பழம் நல்லது.

தப்பி தவறியும் இதை வைத்து பூஜை செய்து விடகூடாது | Poojai Seiyavendiyavai Seiyakudathavai Parigaram

குடுமி தேங்காயை சீறாக உடைத்து பிறகு குடுமியைப் பிரிக்க வேண்டும். அழுகிய தேங்காய் இருந்தால், அதனை மாற்றி வேறு தேங்காயை உடைக்கலாம். கோணலான, வழுக்கையான தேங்காய் இருக்கக் கூடாது.

மேலும் வீட்டில் ஒரு பூஜை நடப்பதற்கு முன்ன சாம்பிராணி புகை போட்டு வீட்டை லட்சுமி கடாக்ஷம் ஆக்குவது சிறந்து.அப்படி செய்வதால் வீட்டில் கெட்ட அதிர்வுகள் எதுவும் இருந்தாலும் அதை விலகி பூஜை சிறப்பாக அமையும்.

தப்பி தவறியும் இதை வைத்து பூஜை செய்து விடகூடாது | Poojai Seiyavendiyavai Seiyakudathavai Parigaram

அடுத்தாக விநாயகரை துளசியால் பூஜிப்பது தவறு பெருமாளுக்கு அர்ச்சதையால் பூஜிப்பதும் தவறு. சிவபெருமானுக்கு தாழம் பூ ஆகாது. திருமகளுக்கு தும்பை பூ ஆகாது. பவளமல்லி சரஸ்வதிக்கும், அம்பிகைக்கு அருகம்புல்லும் பூஜைக்கு உகந்தது அல்ல. வில்வம், கொன்றை, தும்பை, வெள்ளேருக்கு, ஊமத்தை சிவனுக்கு உரியது.

பிரம்ம முகூர்தத்தில் விளக்கேற்றுவதால் ஏற்படும் நன்மைகள்

பிரம்ம முகூர்தத்தில் விளக்கேற்றுவதால் ஏற்படும் நன்மைகள்


காளியம்மன், துர்கை, முருகனுக்கு அரளி பூக்கள் உகந்தவை. அருகம்புல், மல்லி, சாமந்தி, நீலப்பூ, ரோஜா, பன்னீர் ரோஜா, சங்குப்பூ, தாமரை, மரிகொழுந்து, சம்பங்கி, துளசி, விரிச்சிப்பூ ஆகியவை பூஜைக்கான மலர்கள் என்று பெரியவர்களால் சொல்லப்படுகிறது .

தப்பி தவறியும் இதை வைத்து பூஜை செய்து விடகூடாது | Poojai Seiyavendiyavai Seiyakudathavai Parigaram

சாமந்தி போன்ற மனமில்லாத மலர்கள் பூஜைக்கு பயன்படுத்த கூடாது என்று ஒருசிலர் கூறுகிறார்கள். ஆனால், அலங்காரத்திற்குப் பயன்படுத்தலாம். அர்ச்சிக்கும் போது முழு மலரால் மட்டுமே அர்ச்சனை செய்ய வேண்டும். பூவின் இதழ்களைக் கொண்டு அர்ச்சனை செய்வது மிகவும் தவறாகும்.

மேலும் காய்ந்துபோன மற்றும் அழுகிப்போன, வாடிப்போன, பூச்சி கடித்த பூக்களைப் பயன்படுத்துவது தெய்வ குற்றமாகும். இவையே பூஜை அறையில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் ஆகும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US