உறங்கி எழுந்ததும் உள்ளங்கையைப் பார்த்தால் என்ன நடக்கும்

By Sakthi Raj May 27, 2024 09:30 AM GMT
Report

நாம் நமது அன்றாடப் பணிகளைச் செய்வதற்கு கைகள் மிகவும் பயன்படுகின்றது. செயல்களுக்குரிய புலன்களில் கைகளுக்குத் தனி இடம் உண்டு.

இறையுருவத்தை வணங்க, புஷ்பத்தை அள்ளிச் சமர்ப்பணம் செய்ய கைகள் உதவும். இறையுருவங்கள், அபய வரத முத்திரைகளைத் தாங்கிய திருக்கரங்களுடன் காட்சி தரும்.

உறங்கி எழுந்ததும் உள்ளங்கையைப் பார்த்தால் என்ன நடக்கும் | Poojai Seiyavendiyavai Seiyakudathavai Parigaram

இறையுருவத்தின் பெருமையை கைகள் வெளிப்படுத்தும். கைகளை கடவுளுக்குச் சமானமாகச் சொல்கிறது வேதம் (அயம் மெஹஸ்தோ பகவான்). திருமணத்தை நிறைவு செய்வது பாணிக்ரஹணம்.

அதாவது, கை பிடித்தல்.கன்னிகையின் கை பிடித்து வரனிடம் அளிக்க வேண்டும். அரசர்களையும் துறவிகளையும் கைத்தாங்கி பெருமைப்படுத்துவார்கள்.

மந்திர ஜபங்களில் கரன்யாசத்துக்குக் கைகள் வேண்டும். முதுமையில் ஊன்றுகோலைப் பயன்படுத்த கை வேண்டும்.

கையின் நுனியில் அலைமகளும், நடுவில் கலைமகளும் அடிப்பக்கத்தில் கோவிந்தனும் இருப்பதாகப் புராணம் சொல்லும். ஹஸ்தரேகா சாஸ்திரம் கையை வைத்து உருவானது.

உறங்கி எழுந்ததும் உள்ளங்கையைப் பார்த்தால் என்ன நடக்கும் | Poojai Seiyavendiyavai Seiyakudathavai Parigaram

அறிவு, செல்வம், ஆன்மிகம் ஆகிய மூன்றையும் பெற, காலையில் எழுந்ததும் கைகளைப் பார்க்க வேண்டும். அத்துடன்கராக்ரே

வஸதெ லஷ்மீ கரமத்யே ஸரஸ்வதிகரமூலேது கோவிந்த:
ப்ரபாதெ கரதர்சனம்

என்ற ஸ்லோகத்தைக் கூற வேண்டும்.

கையைத் தலையணையாக வைத்து உறங்கும் நமக்கு, விழித்ததும் அதைப் பார்ப்பது எளிது. நல்ல நடைமுறைகளைப் பின்பற்றினால் நன்மைகள் பல உண்டு.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US