பூஜை செய்யும் பொழுது மணி அடிப்பதின் அவசியம்
நம் வீடுகளிலும் கோயில்களிலும் பூஜை நேரத்தில் கண்டிப்பாக மணி அடித்து சுவாமி தரிசனம் செய்வது உண்டு.இதற்கு பின்னால் நிறைய விஷயங்கள் இருக்கிறது.
அதாவது ஒரு உயிரின் ஓசையை தட்டி எழுப்புவது ஆகும்.நம் கண் விழித்து தான் இருப்போம்,சமயங்களில் எங்கையோ மனம் மாட்டி கொண்டு தவித்துக்கொண்டு இருக்கும்.
இனம் புரியாத பிரச்சனைகளில் சிக்கி கொண்டு தன்னிலை மறந்து நிற்பதும் உண்டு.அந்த வேளையில் கோயிலில் வீடுகளில் நம் உயிரை சற்று நேரம் சமநிலை செய்து கடவுள் பக்கம் கொண்டு செல்ல மணி அடிக்கப்படுகிறது.
மேலும் பூஜை நேரங்களில் நம் கவனம் வேறு எந்த பக்கமும் செல்லாமல் இருக்கவும் மணி ஓசை எழுப்ப படுகிறது.இன்னொரு முக்கியம் விஷயம் என்னவென்றால் மணி ஓசை கேட்கும் பொழுது மனதில் தெய்விக ஆற்றல் நிரம்புகிறது.எதிர்மறை எண்ணங்கள் விலகுகிறது,நேர்மறை எண்ணம் நம்மை சேர்கிறது.
கோவிலில் சுவாமிக்கு அபிஷேகம், தூப தீபம், நைவேத்யம், கற்பூர ஆரத்தி காட்டும் போதும், வீட்டில் பூஜையிலும் மணியடிப்பது அவசியம்.அப்போது,
“ஆகமார்த்தம் து தேவானாம்
கமனார்த்தம்து ரக்ஷஸாம்
குர்வேகண்டா ரவம்தத்ர
தேவதா ஆஹ்வான லாஞ்சனம்”
என்னும் மந்திரத்தை சொல்லி மணிக்கு சந்தனம், குங்குமம் இட்டு, மணியடிக்க வேண்டும்.
சமஸ்கிருதம் தெரியாதவர்கள், “தேவர்களை வரவேற்பதற்காகவும், பூஜை செய்யுமிடத்தில் இருக்கும் கண்களுக்குப் புலப்படாத தீய அல்லது அசுர சக்திகளை விலக்குவதற்காகவும் இந்த மணியோசையை எழுப்புகிறேன்,” என்று சொல்ல வேண்டும்.
பெருமாளுக் குரிய மணியின் உச்சியில் கருடாழ்வாரும், சிவனுக்குரிய மணியில் நந்தியும் இடம் பெற்றிருக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |