2026: புத்தாண்டு முதல் நாள் சிறப்பாக அமைய சொல்ல வேண்டிய மந்திரங்கள்
எந்த ஒரு காரியங்கள் நாம் செய்வதாக இருந்தாலும் இறை வழிபாடு செய்து தொடங்கினால் நிச்சயம் அந்த காரியம் தடையின்றி அமையும். காரணம் இந்த பூமியில் நாம் வெறும் வழிப்போக்கர்களே.
நம்மை மீறி ஒரு மிகப்பெரிய சக்தி இந்த பிரபஞ்த்தை இயக்கி கொண்டு இருக்கிறது என்று மனதில் வைத்துக்கொண்டு எல்லா காலகட்டங்களில் அவர்களுக்கு நன்றி தெரிவித்தும் இன்னும் சிறப்பாக நாம் செய்யக்கூடிய காரியம் அமைய வேண்டும் என்றும் அவர்களை பிரார்த்தனை செய்து தொடங்குவது அவசியம் ஆகும்.
அந்த வகையில் 2026 புது வருடம் நாளை பிறக்கின்ற நேரத்தில் நாம் அன்றைய தினம் இறைவழிபாடு செய்யும் பொழுது சொல்ல வேண்டிய மந்திரங்களை பற்றி பார்ப்போம்.
1. ஓம் சாந்தி சாந்தி சாந்தி - இந்த மந்திரத்தை புத்தாண்டு தினத்தன்று நாம் பாராயணம் செய்யும் பொழுது ஒரு அமைதி நம்மை வழி நடத்தும்.
2. ஓம் கம் கணபதியே நமோ நமஹ- புத்தாண்டு தொடங்குவதை முன்னிட்டு எந்த ஒரு காரியங்களும் தடைகளும் தாமதங்களும் இல்லாமல் வெற்றி பெற வேண்டும் என்று விநாயகரை வழிபாடு செய்து தொடங்கினோம் என்றால் அவருடைய அருளால் எல்லாம் நல்ல விதமாக அமையும்.
3. ஓம் நம சிவாய- செல்கின்ற பாதையில் எவ்வளவு பெரிய துன்பங்கள் வந்தாலும் என்னை வழிநடத்தி செல்லக்கூடிய ஈசன் உன்னை நான் சரண் அடைகிறேன். என்னை நீ காப்பாற்ற வேண்டும் என்று சிவபெருமானை சரணடைந்து இந்த மந்திரத்தை சொன்னால் நிச்சயம் அவர் கைவிடாமல் காப்பாற்றுவார்.
4. ஓம் ஸ்ரீ மகா லட்சுமியே நமஹ - மனித வாழ்க்கைக்கு தேவையான பொருளாதாரத்தை எந்த ஒரு குறைவின்றி வழங்க அருள் புரிய வேண்டும் என்று மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்தால் பணவரவு இரட்டிப்பாகும்.
5. ஓம் நமோ பகவதே வாசுதேவாய - செய்வதறியாது நிற்கின்ற வேலையில் என்னை வழிநடத்தக்கூடிய ஒரு ஆசிரியராக இருந்து இந்த பூமியில் வாழக்கூடிய குறைந்த நாட்களில் உன் மாணவனான என்னை வழிநடத்த வேண்டும் என்று நாராயணனை வேண்டிக் கொண்டால் மனதில் துன்பம் விலகும்.
6. ஓம் குருவே நமஹ - உலக வாழ்க்கையில் கற்றல் என்பது முடிவில்லாது. எந்த ஒரு காரியத்தையும் தடைகள் இல்லாமல் கற்றுத் தெளிந்து ஞானம் பெறுவதற்கு குரு பகவானை சரண் அடைந்து அவருடைய மந்திரத்தை சொன்னால் நிச்சயம் நல்ல பலனை புத்தாண்டில் பெறலாம்.
7. ஓம் ராம ராமாய நமஹ- ஸ்ரீ ராமரைப் போல் எதையும் வலிமையோடு எதிர்கொண்டு காலம் ஒருநாள் மாறும் என்ற நம்பிக்கையோடு பூமியில் வாழ வேண்டும் என்று ஸ்ரீ ராமபிரானை சரண் அடைந்து இந்த மந்திரத்தை பாராயணம் செய்தால் வெற்றி நிச்சயம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |