நீண்ட நாட்கள் திருமணம் தள்ளிப் போகிறதா? செய்யவேண்டிய முக்கிய பரிகாரங்கள்
திருமணம் என்பது ஒவ்வொரு மனிதன் வாழ்க்கையில் நிச்சயம் நடக்க வேண்டிய ஒரு முக்கியமான நிகழ்வு. ஒரு மனிதனுடைய வாழ்க்கை அவனுடைய திருமணத்தில் பூர்த்தியாகிறது. அந்த வகையில், பலருக்கும் இந்த திருமணம் என்பது மிகச் சாதாரணமாக எளிதில் ஒருவருக்கு நடப்பது போல் நடப்பதில்லை.
ஒரு சிலருக்கு திருமணம் நடப்பது போல் அருகில் வந்தும் அவை தட்டிப் போவதை நாம் பார்க்க முடிகிறது. இதற்கெல்லாம் அவர்கள் ஜாதகத்தில் ஏதேனும் தோஷம் அல்லது பரம்பரை ரீதியாக சில கர்ம வினைகள் இருப்பதாலே இவ்வாறு நிகழ்வுகள் நடக்கிறது.

இதற்கெல்லாம் நிச்சயம் பயப்பட தேவையில்லை. இந்த உலகத்தில் எந்த ஒரு தோஷத்திற்கும் அதற்குரிய நிவாரணமும் நமக்கு உள்ளது. திருமணம் நடப்பதற்கு மாதமாதம் வருகின்ற உத்திர நட்சத்திரத்தன்று சிவபெருமானுக்கு தொடர்ந்து 11 மாதங்கள் பால் அபிஷேகம் செய்வதால் விரைவில் திருமணம் நமக்கு கைக்கூடி வருகிறது.
அதேபோல், ஹஸ்த நட்சத்திரத்தன்று துர்க்கை அம்மனுக்கு சிவப்பு பட்டுத்துணி சாற்றி தாமரையை பாதத்தில் வைத்து 27 எண்ணிக்கை கொண்ட எலுமிச்சை மாலையை சாற்றி குங்கும அர்ச்சனை செய்தும் குங்குமத்தை நெற்றியில் வைத்து வரவும் நமக்கு விரைவில் திருமண பாக்கியம் கிடைக்கிறது. நல்ல குடும்பமும் நல்ல வாழ்க்கை துணையும் அமைகிறார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |