சனி தசா புத்தியால் கடுமையாக பாதிக்கப்படுபவர்களா? இந்த பரிகாரங்களை செய்யுங்கள்
ஜோதிடத்தில் கர்ம காரகன் என்று அழைக்க கூடியவர் சனி பகவான். அதாவது நாம் செய்த தவறை மறந்தாலும் சனிபகவான் கட்டாயமாக மறப்பதில்லை. அதேபோல், அவர் நாம் செய்த புண்ணியத்தையும் மறப்பதில்லை.
அதற்கான பலனையும் கொடுத்துவிடுவார். அந்த வகைகள்யில், ஒருவர் ஜாதகத்தில் சனி தசா புத்தி காலங்கள் மிகவும் கடுமையான காலகட்டமாக இருக்கும். அவர்கள் அந்த நேரங்களில் மீண்டும் ஒரு பிறப்பு எடுக்கிறார் என்றே சொல்லலாம்.
வாழ்க்கையில் இத்தனை வருடம் அவர்கள் சந்தித்த விஷயங்கள் எல்லாம் மாயை என்று போலி பிம்பம் ஒரு புதிய வாழ்க்கைக்குள் அவர்களை சனி பகவான் கூட்டி செல்வார்.

உண்மை எது? பொய் எது? என்கின்ற எல்லா உண்மையையும் அவர் கற்றுக் கொடுக்க கூடியவர். இது ஒரு வகையான பாடமாக இருந்தாலும் சனி தசா புத்தியில் கடுமையான பாதிப்புகள் இருக்கும் என்பதை நாம் கட்டாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதிலிருந்து விடுபடுவதற்கு நாம் ஒரு சில வழிமுறைகளை செய்யலாம்.
அதாவது இந்த காலகட்டங்களில் தினமும் அதிகாலைகளில் எழுந்து குளித்திட வேண்டும். உடம்பில் நல்ல வியர்வை படும்படியாக உழைக்க வேண்டும். எந்த ஒரு விஷயத்தை தள்ளி போடாமல் உடனடியாக முடித்து விட வேண்டும்.
முடிந்தவரை உறவுகளை விட்டு தூரமாக பயணம் சென்று தனித்து வாழ்வது என்பது இந்த சனி தசா புத்தி காலம் நல்ல யோகத்தை பெற்று கொடுக்கும்.

வயதான முதியவர்களுக்கு உதவி செய்வது ஒரு நல்ல பலன் அளிக்கும். பழைய காலணிகளை அணியாமல் அடிக்கடி மாற்றிக் கொள்வதும் அவசியம். சனிக்கிழமை தோறும் காகத்திற்கு எள் கலந்த சாதம் வைப்பது புண்ணியத்தை தேடி கொடுக்கும்.
சனிக்கிழமை சில வழிபாடு பிரதோஷ வழிபாடு செய்வது நல்ல பலன்களை பெற்றுக் கொடுக்கும். முடிந்தவரை இந்த காலகட்டங்களில் எளிமையாக இருக்க பழகுங்கள். நீங்கள் எதன் மீது பற்று வைக்கிறீர்களோ அதன் மீது தான் சனி பகவான் முதலில் உங்களுடைய பாடத்தை துவங்குகிறார்.