தடைபட்ட காரியங்கள் தடையின்றி நடக்க செய்ய வேண்டிய சக்தி வாய்ந்த பரிகாரம்
நம்முடைய ஜாதகத்தில் நேரம் சரியில்லை என்றால் நிச்சயமாக அடுத்தடுத்து நாம் சில சிக்கல்களையும் தடைகளையும் சந்திக்க வேண்டிய நிலை இருக்கும். அப்பொழுது நாம் என்ன செய்வது என்றே தெரியாது. இக்கட்டான நிலை கழுத்தை நெரிப்பது போல் இருக்கும்.
அந்த நேரங்களில் நாம் மனம் தளராமல் இறைவழிபாடு செய்வது என்பது அந்த தடைகளை படிப்படியாக அகற்ற உதவும். அதேபோல், தடைபட்ட காரியங்கள் உடனடியாக நிறைவேறுவதற்கு நாம் சில பரிகாரங்களை செய்யலாம்.

அந்த பரிகாரத்தை நாம் மனதார செய்கின்ற பொழுது நிச்சயம் தடைபட்ட காரியம், உடனடியாக எந்த ஒரு தடையும் இன்றி நடப்பதை நாம் பார்க்கலாம். அந்த வகையில், உங்களுடைய வீட்டிற்கு அருகில் அல்லது கோவிலில் உள்ள வன்னி மரத்தை 21 முறை சுற்றி வலம் வந்து வணங்கி அந்த இலைகளை 5, 7, 9, 11என்ற எண்ணிக்கையில் பறித்து வீட்டில் உள்ள சிவபெருமானுக்கு சாற்றி வழிபாடு செய்தால் நிச்சயம் தடைபட்ட காரியங்கள் உடனடியாக விலகும்.

மேலும் ,உங்களுடைய கர்ம வினைகளும் படிப்படியாக குறைவதை நாம் பார்க்கலாம். இந்த வழிபாட்டை மனதார செய்கின்ற பொழுது நிச்சயம் கர்ம வினைகள் சிவபெருமானுடைய அருளால் விலகுவதோடு, உங்களுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட தடையும் நீங்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |