தீராத கண் திருஷ்டி நீங்க இந்த ஒரு பரிகாரம் செய்தால் போதும்.. என்ன தெரியுமா?

By Sakthi Raj Apr 12, 2026 08:54 AM GMT
Report

  நம்மில் பலருக்கும் வெளியே சென்று வீடு திரும்பிய பிறகு மனதில் ஏகப்பட்ட குழப்பங்களும் பதட்டமும் உண்டாகுவதை நாம் காணலாம். காரணம் நாம் வெளியே சென்று வீடு திரும்பிய பிறகு நம் மீது ஏதேனும் எதிர்மறையான பார்வையால் கண் திருஷ்டி ஏற்பட்டு விடுமோ என்கின்ற பயம் நம்மை சூழ்ந்துவிடும்.

அந்த வகையில் தீராத கண் திருஷ்டி இருக்கிறது என்று நீங்கள் உணர்ந்தால் அதிலும் இருந்து விடுபட செய்யவேண்டிய முக்கியமான பரிகாரம் பற்றி பார்ப்போம்.

பொதுவாகவே, நம்முடைய எண்ண அலைகளுக்கு நிறைய வலிமை உண்டு. அதில் நாம் சிக்காமல் பார்த்துக் கொள்வது தான் புத்திசாலித்தனமாகும்.

தீராத கண் திருஷ்டி நீங்க இந்த ஒரு பரிகாரம் செய்தால் போதும்.. என்ன தெரியுமா? | Powerful Salt Rituals To Cleanse Neagtive Energy

2026: இந்த ராசிகளுக்கு தமிழ் புத்தாண்டு அட்டகாசமாக அமையப் போகிறதாம்..

2026: இந்த ராசிகளுக்கு தமிழ் புத்தாண்டு அட்டகாசமாக அமையப் போகிறதாம்..

அப்படியாக ஒருவர் நம்முடைய வாழ்க்கையை பார்த்தோ அல்லது நம்முடைய நிலைமையை கண்டு நம் மீது போட்டி பொறாமையின் காரணமாக வஞ்சனை எண்ணம் கொண்டு பழகும் பொழுது அவர்களின் எண்ண அதிர்வலைகள் நம்முடைய வாழ்க்கையில் சில தாக்கத்தை உண்டு செய்கிறது.

இதிலிருந்து வெளிவர வேண்டும் என்றால் நம்முடைய மனநிலையை நாம் வலிமையாக வைத்துக்கொள்ள வேண்டும், தெளிவாக செயல்பட வேண்டும். ஆனால் இங்குதான் நாம் நிலை தடுமாறி வருகிறோம். அதாவது ஒரு இடத்திற்கு சென்று வீடு திரும்பிய பிறகு நம்முடைய மனநிலையில் ஒரு பதட்டம் உண்டாகுவதை நாம் காணலாம்.

இந்த நேரத்தில் நாம் உடனடியாக அந்த விஷயத்தை பற்றி அதிகம் சிந்தித்து பயத்தில் மூழ்குவதை காட்டிலும் அதற்கான ஒரு நல்ல நிவாரணத்தை பெற்று விட்டால் நிச்சயம் எந்த ஒரு பாதிப்பும் நமக்கு ஏற்படாது.

தீராத கண் திருஷ்டி நீங்க இந்த ஒரு பரிகாரம் செய்தால் போதும்.. என்ன தெரியுமா? | Powerful Salt Rituals To Cleanse Neagtive Energy

சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி : கோடிகளில் புரளப்போகும் 3 ராசிகள்!

சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி : கோடிகளில் புரளப்போகும் 3 ராசிகள்!

அந்த வகையில் வெளியே சென்று வீடு திரும்பிய பிறகு உங்களால் நிறைய மெனக்கிடல்கள் செய்து இந்த கண் திருஷ்டியை போக்க முடியவில்லை என்றால் இந்த எளிதான ஒரு விஷயத்தை மட்டும் நீங்கள் பின்பற்றினால் போதும் நீங்கள் பாதிப்புகளில் இருந்து கடந்து விடலாம்.

அதாவது சுப காரிய நிகழ்ச்சிகளுக்கு சென்று வீடு திரும்பிய பிறகு குடும்பத்தில் இருப்பவர்கள் ஒரு கைப்பிடி அளவு உப்பு எடுத்துக்கொண்டு அதை வெதுவெதுப்பான நீரில் போட்டு நம்முடைய கால்களை அந்த நீரில் இருப்பது நிமிடம் வைத்து விட நம்முடைய உடலும் புத்துணர்ச்சி அடைந்து விடும்.

நமக்கு ஏற்படக்கூடிய கண் திருஷ்டியும் நீங்கிவிடும் அல்லது குளிக்கும் நீரில் சிறிது கல் உப்பு போட்டு குளித்தாலும் எதிர்மறை தாக்கத்திலிருந்து நாம் விடுபடலாம். இந்த ஒரு எளிய பரிகாரம்ஒன்றே நம்மை பல தீய ஆற்றலில் இருந்து நம்மை காப்பாற்றும். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US