விரும்பிய அனைத்தும் அருளும் அபிராமி அந்தாதி
By Sakthi Raj
மனிதனாக பிறந்தால் அவனுக்கான துன்பம் இன்பம் எல்லாவற்றையும் அனுபவித்தாக வேண்டும்.அதாவது கடவுள் எவ்வளவு பெரிய இன்னல்களும் சோதனைகளும் கொடுத்தாலும் அதர்க்கான தீர்வும்,நம்பிக்கையும் அதை கடந்து செல்ல மன பக்குவத்தையும் கொடுப்பார்.
அப்படியாக,கேட்டது எல்லாம் தருபவள் அன்னை அபிராமி.உலக உயிர்கள் அனைத்திற்கும் அவளே துணை.அப்படியாக நாம் சந்திக்கும் கஷ்டங்கள் இருந்து வெற்றி பெற நாம் சொல் வேண்டிய அபிராமி அந்தாதி பாடல்கள் பற்றி பார்ப்போம்.
பயம் தீர:
வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும்,
செவ்வியும், உங்கள் திருமணக் கோலமும், சிந்தையுள்ளே,
அவ்வியம் தீர்த்து என்னை ஆண்டபொற் பாதமும் ஆகிவந்து
வெவ்விய, காலன் என்மேல் வரும்போது-வெளி நிற்கவே.
நினைத்ததை சாதனை செய்ய:
கொள்ளேன் மனத்தில் நின் கோலம் அல்லாது அன்பர் கூட்டம் தன்னை,
விள்ளேன் பரசமயம் விரும்பேன் வியன் மூவுலகுக்கு,
உள்ளே அனைத்தினுக்கும் புறம்பே உள்ளத்தே விளைந்த,
கள்ளே களிக்கும் களியே அளிய என் கண்மணியே.
உடல் நலம் பெற:
மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணி புனைந்த,
அணியே அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப்,
பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெருவிருந்தே,
பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே.
புகழ் கிடைக்க:
நாயகி நான்முகி நாராயணி கை நளின பஞ்,ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதி நச்சு,
வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று,
ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.