துன்பம் விலக ராஜாக்கள் செய்த சக்தி வாய்ந்த முருகன் வழிபாடு
துன்பம் என்பது இயல்பானது தான்.ஆனால் அதை தாங்கி கொள்ளும் பக்குவமும் கடந்து செல்லும் பொறுமையும் இருந்தால் போதும் நாம் எதையும் சாதித்து விடலாம்.அப்படியாக மனிதனுக்கு பூவுலகில் மிக பெரிய துணை இறைவன் தான்.
இறைவனை சரண் அடைந்தவர்கள் யாரும் கெட்டது இல்லை.அப்படியாக கலியுக வரதன் முருகப்பெருமான் பக்தர்களின் துயர் துடைப்பவர்.முருகா என்ற குரலுக்கு அவர் நம்முடைய இன்னல்கள் அனைத்தும் தீர்த்து வைப்பார்.அந்த வகையில் உங்களுக்கு அதீத கஷ்டம் வரும் பொழுது செய்ய வேண்டிய சக்தி வாய்ந்த முருகப்பெருமானின் பரிகாரத்தை பற்றி பார்ப்போம்.
மிகுந்த துன்பத்தால் அவதி படும் பொழுது ஒரு வெள்ளை காகிதத்தை எடுத்துக்கொண்டு அதில் நான்கு பக்கமும் மஞ்சள் வைத்து அந்த காகிதத்தின் மேலே துவக்கத்தில் “சரவணபவ” என்று எழுதி கொள்ளவேண்டும்.அந்த காகிதத்தின் நடு பக்கத்தில் நட்சத்திர கோலம் போட்டுக் கொள்ளுங்கள்.
நட்சத்திர கோலத்தில் 6 முக்கோணங்கள் சுற்றிலும் உங்களுடைய பிரச்சனையை எழுத வேண்டும்.அதாவது என்ன இன்னல்கள் துன்பம் இருக்கிறதோ அதை எல்லாம் ஆறு கட்டத்திற்குள் எழுதி, நடுவில் “ஓம்” என்ற வார்த்தையையும் எழுதி,அப்படியே சுருட்டி ஒரு நூல் போட்டு கட்டி வீட்டில் இருக்கும் முருகப்பெருமான் திரு உருவப்படத்தின் முன் பாதத்தில் வைக்க வேண்டும்.
இந்த பரிகாரத்தை செய்து முருகருக்கு செவ்வரளி பூ போட்டு விளக்கு ஏற்றி கற்பூரம் காண்பியுங்கள்.இவ்வாறு செய்ய முருகப்பெருமான் கட்டாயம் உங்களுடைய கவலைகள் கஷ்டங்களை விரைவில் தீர்த்து வைப்பார்.
மேலும் இந்த பரிகாரத்தை ராஜாக்கள் காலங்களில் இருந்து செய்யப்பட்டு வருகிறது.அதாவது அந்த காலத்தில் பிரச்சனை ஏதாவது இருந்தால் ஒரு தகட்டில் அவர்களுடைய பிரச்சினையை எழுதி, தெய்வத்தின் பாதத்தில் புதைத்து வைப்பார்கள்.
இவ்வாறு வைக்க அவர்களின் பிரச்சனைக்கு ஒரு மிக பெரிய தீர்வு கிடைக்கும் என்பது அவர்களின் அதீத நம்பிக்கை.இந்த பரிகாரத்தை நாம் எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம்.
ஆக உங்கள் பிரச்சனை எதுவாக வேண்டுமானலும் இருக்கட்டும் முழு நம்பிக்கையோடு வேண்டுதல் வைத்து இதை செய்ய முருகன் அருளால் உங்கள் வேண்டுதலுக்கு விரைவில் நல்ல முடிவு கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |