உங்கள் குடும்பத்தில் அடிக்கடி சண்டையா? இந்த பரிகாரம் அதை மாற்றும்

By Sakthi Raj Oct 06, 2026 01:30 PM GMT
Report

 குடும்பம் என்பது நிச்சயமாக ஒரு நிம்மதியான சூழலில் இருக்க வேண்டும். ஆனால், ஒவ்வொருவரும் ஒவ்வொரு கர்மாவை கொண்டு வந்திருப்பதால் குடும்பத்தில் ஒரு நல்ல பிணைப்பு இருப்பதில்லை.

தாய் ஒருபுறமும், தந்தை ஒருபுறமும், உடன் பிறந்தவர்கள் வேறு ஒரு புறமும் இருந்து குடும்பத்தில் ஒரு குழப்பம் ஏற்படுகிறது. அந்த வகையில் குடும்பத்தில் இருக்கக்கூடிய உறவுகள் இனிமையாக இருப்பதற்கு செய்ய வேண்டிய பரிகாரம் பற்றி பார்ப்போம்.

உங்கள் குடும்பத்தில் அடிக்கடி சண்டையா? இந்த பரிகாரம் அதை மாற்றும் | Powerfull Remedies For Family Issue

தந்தை உடன் உறவு சிறக்க:

தந்தையுடன் தேவை இல்லாத மனக்கசப்புகள் கொண்டவர்கள் 27 ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் 9 மணி வரை சூரிய ஹொரையில் சிவபெருமானை வணங்குவது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.

இந்த ஜாதக அமைப்பு கொண்டவர்கள் இடம் மாற்றம் செய்தால் நிச்சயம் 100% வெற்றி உண்டு

இந்த ஜாதக அமைப்பு கொண்டவர்கள் இடம் மாற்றம் செய்தால் நிச்சயம் 100% வெற்றி உண்டு

தாயிடம் நல்ல உறவு வளர:

தாயுடன் தேவையில்லாத கசப்புகள் தாயின் அன்பிற்கு ஏங்குபவர்கள் திங்கட்கிழமை காலை 6 மணி முதல் ஏழு மணிக்குள் மாரியம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபாடு செய்வது நல்லது. 21 நாட்கள் திங்கட்கிழமை தொடர்ந்து செய்தால் சிறப்பு.

உடன்பிறந்தவர்கள் சண்டை விலக:

உடன்பிறந்தவர்களால் ஏற்பட்ட சண்டை விலக செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் ஏழு மணி வரை செவ்வாய் ஹோரையில் முருகப்பெருமானுக்கு மலர்கள் சமர்ப்பித்து வழிபாடு செய்துவர நல்ல பலன் இருக்கும். 27 செவ்வாய்க்கிழமைகள் செய்தால் மிகச் சிறப்பு.

மகாளய அமாவாசை: இந்த பொருட்க ளை தானம் செய்தால் முன்னோர்களின் ஆசிர்வாதத்தை பெறலாம்

மகாளய அமாவாசை: இந்த பொருட்க ளை தானம் செய்தால் முன்னோர்களின் ஆசிர்வாதத்தை பெறலாம்

கணவன் மனைவி ஒற்றுமை உண்டாக:

வெள்ளிக்கிழமை காலை 6:00 மணி முதல்7 மணி வரையிலான சுக்கிர ஹோரையில் விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபட நல்ல பலன்கள் இருக்கும். இதை 11 வெள்ளிக்கிழமையில் செய்தால் விரைவில் மாற்றத்தை காணலாம். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US