பிரதோஷ நாளில் நரசிம்மரை வழிபாடு செய்யலாமா?
இன்று ஆகஸ்ட் 01-08-2024, குரோதி வருடம், ஆடி 16, வியாழக்கிழமை, பகல் 03.29 பின்பு தேய்பிறை திரியோதசி பிரதோஷ விரதம்.
பிரதோஷம் என்றால் நமக்கு முதலில் சிவபெருமான் தான் நினைவிற்கு வருவார்.ஆனால் பிரதோஷ நாளில் நாம் நரசிம்மரை நினைத்து விரதம் இருப்பதால் நமக்கு நடக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம்.
பிரதோஷ நாளில் பெருமாளின் அவதாரமான நரசிம்மரை வணங்கி விருதமிருந்தால் நினைத்த காரியம் கைகூடும், எதிரிபயம் விலகும், தீவினைகள் விலகும், கடன்கள் தீரும், குடும்பத்தில் அமைதி நிலவும் என்பது ஐதிகம்.
எனவே துயரத்தின் பிடியில் சிக்கி தவிக்கும் மனிதர்கள் துவண்டு போகாமல் சிவனயும் ஸ்ரீ நரசிம்மரையும் வழிபடுவதற்கான காலம்தான் பிரதோஷம் காலம்.
சிவனுக்கு மட்டுமல்ல,ஸ்ரீ மஹா விஷ்னுவிற்கும் உகந்த காலம்தான். பிரஹலாதனின் பக்தியை மெய்பிக்கவும் ஹிரன்ய கசிபுவை வதம் செய்து உலகை காக்கவும் தூணிலிருந்து நர நாராயண ரூபமாய் உக்ர நரசிம்ம மூர்த்தியாக வெளிவந்த காலம் பிரதோஷ காலம்தான்.
நரசிம்மருக்கு பிரதோஷங்கள் மிகவும் விசேஷமானவை. பிரதோஷம் என்பது நரசிம்மரை வழிபடுவதற்கான அற்புதமான நாளாகும்.
எனவே பிரதோஷ நாளில், நரசிம்க பெருமாளை வழிபடுவது மிகுந்த பலன்களைக் கொடுக்கிறது. நரசிம்மர் அவதாரம் நிகழ்ந்தது ஒரு பிரதோஷ காலத்தில்தான் என்கிறது நரசிம்ம புராணம்.
ஆதலால் மனதில் தெம்பும் தைரியமும் பிறக்க வாழ்க்கையில் உள்ள துன்பம் விலக நரசிம்மர் வழிபாடு செய்யுங்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |