கோயிலில் நந்தியின் காதுகளில் வேண்டுதலை சொல்வது சரியா?
நம் அனைவர்க்கும் ஒரு எண்ணம் இருக்கிறது அதாவது நந்தியின் காதுகளில் நாம் வேண்டுதலை சொல்வதால் அதை நந்தி தேவன் நிறைவேற்றி வைப்பார் என்று.
ஆனால் உண்மையில் நந்தியின் காதுகளில் நாம் வேண்டுதலை வைக்கலாமா?அது சரியா தவறா என்பதை பற்றி பார்ப்போம்.
சிவாலயத்திற்குள் நுழைவதற்கு முன்னால் நந்திக்குப் பின்னால் நின்று கொம்புகள் வழியாக இறைவனை தரிசிக்க வேண்டும்.
சிலர் இறைவனை தரிசிக்க வேண்டும் என்று நந்தியை மறைத்த படி நின்று கொள்ளுவார்கள்.ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் இறைவனுக்கும், நந்திக்கும் இடையே இறைவனை மறைக்கும் விதமாகச் சென்று நின்று வழிபடக்கூடாது.
எந்த வேண்டுதல் இருந்தாலும் அதை இறைவனிடம் நேரடியாக பிராத்தனை செய்து வழிபடலாம். பிறகு எப்பொழுதும் இறைவனை நினைத்தபடி தியானத்தில் இருக்கும் நந்திபகவானை தொந்தரவு செய்யும் வகையில் நந்தியை மறைப்பதும் நந்தியின் காதுகளில் ஏதாவது சொல்லுவதுமாக இருக்கக்கூடாது.
பிரதோஷ காலத்தில் நந்தியின் சிரசில் இறைவனின் திருநடனக் காட்சி தென்படுவதால் அந்த நேரத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளைச் நடைபெறும்.
அந்த நேரத்தில் சிவனடியார்களின் தலைவனாகிய நந்திக்குச் செய்யப்படும் ஆராதனை அந்த ஆண்டவனுக்கே செய்யும் ஆராதனை என்பதால் தனிச் சிறப்பு பெறுகிறது.
அதனைத் தவறாகப் புரிந்துகொண்டு நந்தியின் காதுகளில் வேண்டுகோளைச் சொல்வது என்பது வீணான செயல்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |