நீங்கள் ஒரே ராசி ஒரே லக்னத்தில் பிறந்தவர்களா? உங்கள் வாழ்க்கை இப்படித்தான் இருக்குமாம்
ஜோதிடத்தில் 12 ராசிகள் 27 நட்சத்திரங்கள் மற்றும் 12 லக்கினங்கள் இருக்கிறது. எவ்வாறு ஒருவருடைய ராசி நட்சத்திரம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறதோ அதேபோல் அவர்களுடைய லக்னமும் மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது.
லக்னத்தில் இருந்து தான் 12 வீடுகளும் கணக்கெடுத்து அவர்களுக்கு உரிய பலன்களை நாம் சொல்ல முடியும். அந்த வகையில் ஒரு சிலர் ஒரே ராசி மற்றும் ஒரே லக்னத்தில் பிறந்திருப்பார்கள். அதாவது சிம்ம ராசி சிம்ம லக்னம் என்று ஒரே ராசி லக்னம் கொண்டிருப்பவர்களுக்கு வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.

நம்முடைய ஜாதகத்தை எடுத்துக் கொண்டால் அதில் "ல" என்கின்ற ஒரு கட்டம் இருக்கும். அந்தக் ராசி கட்டம் தான் நம்முடைய லக்னமாகும். அதிலிருந்து தான் 12 வீடுகளும் கணக்கில் கொண்டு நம்முடைய வாழ்க்கை பலனை நாம் கணித்து தெரிந்து கொள்கின்றோம்.
அப்படியாக, ஒருவர் ஒரே ராசி ஒரே லக்னத்தில் பிறந்திருக்கிறார்கள் என்றால் அவர்கள் எந்த ஒரு அச்சம் கொள்ள தேவை இல்லை. அவர்களுடைய வாழ்க்கை மிகச் சிறப்பாக அமையும்.

அதாவது இவர்கள் பிறந்த ராசி தேய்பிறை சந்திரனாக இருந்தாலும் வளர்பிறை சந்திரனாக இருந்தாலும் கூட இவர்களுக்கு நீண்ட ஆயுள், பொருளாதாரத்தில் நல்ல வளர்ச்சி, எதையும் புத்திசாலித்தனமாக யோசித்து அணுகக்கூடிய பக்குவமும் பெற்று இருப்பார்கள்.
இவர்கள் எந்த ஒரு நிலையிலும் தைரியமாக போராடி சமாளிக்கக்கூடிய திறனை பெற்றிருப்பார்கள். எவ்வளவு பெரிய கஷ்டம் வந்தாலும் அதை தாண்டி சாதிக்கக்கூடிய வலிமை ஒரே ராசி மற்றும் ஒரே லக்னத்தில் பிறந்தவர்களுக்கு இருக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |